சட்டமன்றத் தேர்தல் 2011 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்டமன்றத் தேர்தல் 2011 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி 30 இடங்களில் போட்டியிட்டது.  

பாட்டாளி மக்கள் கட்சிவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:

கோ.க.மணி, மேட்டூர் சட்டமன்றத் தொகுதி - 73078
ஜெ.குரு ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி - 92739
தி.வேல்முருகன் நெய்வேலி சட்டமன்றத் தொகுதி - 61431
கி.ஆறுமுகம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி - 65881
அ.தமிழரசு ஓமலூர்  சட்டமன்றத் தொகுதி - 65558
த.அறிவுச்செல்வன் புவனகிரி சட்டமன்றத் தொகுதி - 74296
கோ.எதிரொலி மணியன் போளூர் சட்டமன்றத் தொகுதி - 63846
கீ.லோ.இளவழகன் ஆற்காடு  சட்டமன்றத் தொகுதி - 74005
மு.செயராமன் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி - 50425
மு.இளஞ்செழியன் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி - 49768
க.நா.சேகர் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி - 67929
மு.கார்த்தி எடப்பாடி சட்டமன்றத் தொகுதி - 69848
தி.க.ராசா பர்கூர் சட்டமன்றத் தொகுதி - 59271
சி.வடிவேல் கவுண்டர் பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதி - 51664
கோ.பொன்னுசாமி ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி - 63337
க.அகோரம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி - 74466
எம். கலையரசு அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி - 80233
வ.கோ.ரங்கசாமி செங்கற்பட்டு சட்டமன்றத் தொகுதி - 83006
அ.கணேஷ் குமார் செஞ்சி சட்டமன்றத் தொகுதி - 77026
போ.ச.உலகரட்சகன் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி - 76993
ஜே.பால்பாஸ்கர் திண்டுக்கல்  சட்டமன்றத் தொகுதி - 47817
கி.செல்வம் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி - 72833
இரா.பிரகாசு மைலம் சட்டமன்றத் தொகுதி - 61575
பாடி.வெ.செல்வம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி - 51664
கா.சு.மகேந்திரன் பவானி சட்டமன்றத் தொகுதி - 59080
கோ.இராமச்சந்திரன் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி - 46527
பெ.சாந்தமூர்த்தி தர்மபுரி சட்டமன்றத் தொகுதி - 72900
டாக்டர் க.அருள்மணிஆலங்குடி  சட்டமன்றத் தொகுதி - 52123
மொ.ப.சங்கர் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி - 65016
சின்னதுரை வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி - 22925


பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரை சந்தித்து மனு அளித்தார்

சென்னை:
         
           வாக்கு எண்ணிக்கையின்போது புதிய முறையைக் கையாளாமல் வாக்குச் சாவடி வாரியாக எண்ண வேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்துள்ளது.  
 
                பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஆர். வேலு, வழக்கறிஞர் பாலு ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.  
 
இது குறித்து பாமக தலைவர் ஜி.கே. மணி கூறியது: 
 
            வாக்கு எண்ணிக்கையில் புதிய முறையை கையாளப்போவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை சந்தித்து வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பாமக சார்பில் சில கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.  ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குப் பதிவு முடிந்ததும் 17-சி என்ற படிவம் வேட்பாளர்களின் முகவர்களுக்குத் தரப்படும். அதில் மொத்த வாக்குகள், பதிவான வாக்குகள் போன்ற விவரங்கள் தேர்தல் அலுவலர், முகவர்களின் கையெழுத்துடன் இருக்கும். அதில் ஒரு படிவம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும். 
 
            அந்தப் படிவத்துடன், வேட்பாளர்களின் முகவர்களிடம் இருக்கும் படிவத்தை ஒப்பிட்டு சரிபார்த்த பிறகே வாக்கு எண்ணிக்கையைத் தொடங்குவார்கள். அப்போதுதான் தவறுகளை தடுக்க முடியும்.  எனவே, புதிய முறையைப் பின்பற்றாமல் வாக்குச் சாவடி வாரியாக வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும்.  ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே அடுத்த சுற்றுக்குச் செல்ல வேண்டும். அதில் வேட்பாளர்களின் முகவர்கள் சந்தேகம் எழுப்பினால் அதற்குத் தீர்வு கண்ட பிறகே அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும்.  வேட்பாளர்களின் தலைமை முகவர் முன்னிலையில்தான் அஞ்சல் வாக்குகளை எண்ண வேண்டும். 
 
              இது தொடர்பாக 234 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி உறுதியளித்தார் என்றார் ஜி.கே. மணி.

தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பாராட்டு

 பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பது:-

            தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவைத் தேர்தல்கள் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளன. இரு மாநிலங்களிலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதற்கு வசதியாக தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு வாக்களிக்கும்படி நான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

            அதேபோல் புதுவையிலும் நல்லாட்சி தொடர எங்கள் வேண்டுகோளை ஏற்று வாக்களித்த மக்களுக்கு நன்றி. சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, சோனியாகாந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அயராது உழைத்த பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.கூட்டணிக்கு வாக்களிக்க பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.கூட்டணிக்கு வாக்களிக்க பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது குறித்து
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது,

               பணம் படைத்தவர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஏழைகள் தங்கள் உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ளவும், விரும்புகிறவர்களை ஆட்சியில் அமர்த்தவும் கொடுக்கப்பட்ட வாய்ப்புதான் தேர்தல். அந்த வாய்ப்பை தமிழக வாக்காளர்கள் அனைவரும் பயன்படுத்தி, தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைய உதவ வேண்டும்.

              மக்களுக்கு நல்லாட்சியை, நிலையான ஆட்சியை வழங்கும் கட்சிகள் தி.மு.க. தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ளன. இன்னொரு அணி நெல்லிக்காய் மூட்டையைப் போல ஒற்றுமை இல்லாத அணியாக உள்ளது. தேர்தல் காலத்தில்கூட ஒற்றுமையாக இல்லாதவர்கள், தேர்தலுக்குப் பின் எப்படி ஒற்றுமையுடன் இருப்பார்கள்?  தி.மு.க. தலைமையிலான கூட்டணி, மாநில வளர்ச்சிக்கான சாதனைகளை நிகழ்த்திக்காட்டி சரித்திரம் படைத்த கூட்டணி. கருவில் இருக்கும் குழந்தைகள் நலன் முதல், முதியவர்கள் நலன் வரை சிந்தித்து, அதற்கான திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்துள்ளது.

          கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை, சாதித்த சாதனைகளை எடுத்துக் கூறும் தி.மு.க. அணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். தேர்தலுக்காக மட்டும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அ.தி.மு.க. அணியைப் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் காப்பாற்றப்படும். இல்லையெனில், தமிழகம் இருண்டு விடக் கூடிய நிலை உருவாகும்.

               தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள் நிலைத்திட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற, உழவர்கள், மீனவர்கள் நலன் காப்பாற்றப்பட, பெண்களுக்கான உதவித் திட்டங்கள் தொடர, கச்சத் தீவு மீட்கப்பட, இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள் நிலைத்திட, பாதியில் நின்று போன சேதுக் கால்வாய் திட்டம் நிறைவேற தி.மு.க. அணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மயிலம் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் பிரகாஷ் வாக்கு சேகரிப்பு

 
வல்லம் பகுதியில் பா.ம.க. வேட்பாளர் பிரகாஷ் தீவிர வாக்கு சேகரிப்பு




செஞ்சி:
         வல்லம் பகுதியில் மயிலம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் பிரகாஷ் வாக்கு சேகரித்தார். மயிலம் தொகுதி பா.ம.க. வேட்பாளராக பிரகாஷ் போட்டியிடுகிறார். இவர், வல்லம் ஒன்றிய கிராமங்களில் கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார்.


             நாட்டார் மங்கலம், மேல்சித்தாமூர், வல்லம், கொங்காப்பட்டு, தென்புத்தூர், தளவாளப் பட்டு, நாகந்தூர், மரூர் மேல்சேவூர், ஈச்சூர், கல்லேரி, செங்கமேடு, மணியம்பட்டு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது மேளதாளத்துடனும், பட்டாசு வெடித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தனர். 
          ஓட்டுவேட்டையில் தி.மு.க. ஒன்றிய செயலர் அண்ணாதுரை, நிர்வாகிகள் இளம்வழுதி, ராஜகோபால், துரை, பா.ம.க. மாவட்ட செயலாளர் மணிமாறன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வசுந்தராதேவி, காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்ரீதர், சுப்பிரமணி, நாராயணசாமி, மாவட்ட கவுன்சிலர் மனோகரன், இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னையில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்

            தடுமாறும் நடிகரின் பேச்சைக் கேட்டு தமிழகமே சிரிப்பாய் சிரிக்கிறது என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.


சென்னையில் ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க.,வேட்பாளர் சேகர்பாபு, பெரம்பூர் தி.மு.க., கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் ஆகியோரை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டங்களில் பேசிய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்,

            தி.மு.க., கூட்டணி முடிவானதும் தலைவர்களை வாழ்த்திப் பேசிய கலைஞர், இது சமூக நீதிக்கான கூட்டணி என்றார். எதிரணி தடுமாறும் நடிகர் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளது. நடிகரின் தடுமாறும் பேச்சைக் கேட்டு தமிழகமே சிரிப்பாய் சிரிக்கிறது. இளைஞர்கள் பலர் சேர்ந்ததும், கட்சி ஆரம்பித்த நடிகர், கோட்டை நாற்காலியில் அமர துடிக்கிறார். சினிமா எடுத்து அதில் முதல்வராக நடித்து, திருப்திப்பட வேண்டியது தான்.

             தேர்தல் நேரத்தில் மட்டும் திட்டங்களை அறிவிப்பவர் ஜெயலலிதா. 10 ஆண்டுகள் பதவியில் இருந்தும் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. இனிமேலும் ஒன்றும் செய்யப்போவதில்லை. கருணாநிதி ஆட்சியில் 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். இலவசங்கள் கொடுக்க முடியாது என்றவர்கள், போட்டி போட்டு இலவசத்தை அறிவிக்கின்றனர். இது மக்களிடம் எடுபடாது. கருணாநிதி படிக்க உதவி செய்கிறார். ஜெயலலிதாவோ ஆடு, மாடு கொடுப்பேன் என்கிறார். எல்லாரும் இனி ஆடு, மாடு மேய்க்க வேண்டியது தான்.

              தமிழகத்தில் வி.சி.,க்கள் போட்டியிடும் ஒன்பது தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்துள்ளேன். இன்னும் ஒரு தொகுதியில் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. பா.ம.க., போட்டியிடும், 30 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்றார்.

வடமாவட்டத்தில் 110 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

  சென்னை :

         வடமாவட்டத்தில் 110 தொகுதிகளில் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை தேடித்தரும் என, ராமதாஸ் பேசினார். கொளத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து, பெரவள்ளூர் சதுக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

              தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில், 30 மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்திற்காக நான் சுற்றியபோது, அங்குள்ள பெண்களிடம், யாருக்கு வாக்கு? என்று கேட்டபோது, கலைஞருக்குத்தான் வாக்கு என்று பரவலாக கூறினார்கள். அந்த மகராசனால்தான் நாங்கள் ராப்பட்டிணி இல்லாமல் சாப்பிடுகிறோம் என்றும் தெரிவித்தனர்.

            முதன்முதலாக பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் ஒரே கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இதனால், வடமாவட்டத்தில் 110 தொகுதிகளில் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை தேடித்தரும். இது சமூக நீதி கூட்டணி. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, அடித்தட்டு மக்கள் முன்னேற மீண்டும் கருணாநிதி முதல் அமைச்சராக வர வேண்டும். அதற்கு, மு.க.ஸ்டாலினுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

காட்டுமன்னார்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்

 
 
சிதம்பரம்:

              உழைப்பால் தமிழகத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் வன்னியர் மற்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், ஓரணியில் இணைந்துள்ளதை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.  
 
காட்டுமன்னார்கோவிலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராமதாஸ் பேசியது:  
 
                இதே மேடையில் நானும் மறைந்த சமுதாயத் தலைவர் இளையபெருமாளும் பேசியது பழைய நினைவுகள் நினைவுக்கு வருகின்றன. சமுதாயத்துக்காக உடல், பொருள், ஆவி ஆகியவற்றை அர்ப்பணித்தவர் இளையபெருமாள். நானும், இளையபெருமாளும் ஒரு தேர்தலில் சமூகநீதி கூட்டணி வைத்து போட்டியிட்டோம்.  ஆனால் இத்தொகுயில் போட்டியிட்ட அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது கருணாநிதி தலைமையில் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் இணைந்த சமுதாயக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் வெற்றி பெறும்.  
 
              உழைக்கும் சமுதாயமான இரு சமுதாயத்தினரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம் என திருமாவளவனும், நானும் கூடி பேசி ஓரணியில் சேர்ந்தோம்.  அதற்கு பாலமாக இருந்தவர் துரை.ரவிக்குமார். இனி இரு சமுதாயத்தினரிடையே சண்டை வராது. இத்தொகுதியில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தை துரை.ரவிக்குமாருடன் சேர்ந்து நானும் முதல்வரிடம் தெரிவித்து முதல் பட்ஜெட்டிலேயே தனி தாலுக்காவாக மாற்ற முயற்சி செய்வோம்.  
 
             மேலும் சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டு வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படும். எனவே துரை.ரவிக்குமாரை 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என ராமதாஸ் தெரிவித்தார்.  
 
வேட்பாளர் துரை.ரவிக்குமார் பேசியது: 
 
             கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதியில் நீண்டகால கோரிக்கையான முட்டம்-மணல்மேடு பாலம் அமைக்கவும், வீராணம் ஏரி தூர்வாரவும், வெள்ளத்தடுப்புக்கு பலநூறு கோடிக்கு திட்டப்பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என்றார்.  
 
               கூட்டத்தில், பா.ம.க. சொத்து பாதுகாப்புக்குழுத் தலைவர் டாக்டர் ஆர்.கோவிந்தசாமி, மாநில துணைத்தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாவட்டச் செயலாளர் வேணு.புவனேஸ்வரன், முன்னாள் பாமக மாவட்டச் செயலர் உ.கண்ணன், திமுக ஒன்றியச் செயலர் முத்துசாமி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பேசினர்.
 

அதிமுக அணிக்கு தோல்வி பயம் வந்துள்ளது: பாமக நிறுவனர் ராமதாஸ்

ராமதாஸ்
சிதம்பரம்:

              திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு வைகோ ஆதரவு அளிக்க விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் என்று பாமக நிறுவனர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டி:

                தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் அதிமுக அணிக்கு தோல்வி பயம் வந்துள்ளது. கொள்கை திட்டங்கள், வாக்குறுதிகள் பற்றி பேசாமல் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து ஜெயலலிதா விமர்சனம் செய்து வருகிறார்.இதுபோன்று எந்த ஒரு மாநிலத்திலும் அரசியல் அநாகரிகம் இல்லை. தலைவர்களின் குடும்பங்களை பற்றி யாரும் விமர்சித்தது இல்லை. அண்மையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை பற்றி பாஜக குழுவினர் ஒரு முறை தவறான தகவலை வெளியிட்டனர்.

               அதற்காக அக்கட்சி மூத்தத் தலைவர் அத்வானி உடனே வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதினார். இது அரசியல் நாகரிகம், பண்பாடு.ஆனால் இங்கு ஜெயலலிதா தனது பிரசாரத்தில் முழுக்க முழுக்க தனி நபர் விமர்சனம் செய்து வருகிறார். இதை அவர் தவிர்க்க வேண்டும்.அவருடன் கூட்டணி சேர்ந்துள்ள நடிகர் நிதானமிழந்து பேசி வருகிறார். அந்த நடிகர் திமுக, பாமக கூட்டணி கொள்கையற்ற கூட்டணி என கூறி வருகிறார்.

              திமுக, பாமக இரு கட்சிகளும் இடஒதுக்கீடு, சமூகநீதி, இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி, சமச்சீர்கல்வி, இருமொழிக் கொள்கை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றம், சிறுபான்மை மக்கள் பாதுகாப்பு, மதச்சார்பின்மை, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதற்கேற்ப இடஒதுக்கீடு, மத்திய, மாநில தமிழ் ஆட்சிமொழி, நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழி ஆகிய கொள்கைகளில் பாமகவுக்கும், திமுகவுக்கும் ஒற்றுமையும் உடன்பாடும் உள்ளது.

                 அந்த வகையில் திமுக, பாமக கொள்கைக் கூட்டணி, லட்சியக் கூட்டணி. அதிமுக மற்றும் நடிகர் சேர்ந்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி.தற்போது நடிகர் கட்சியை ஏன் சேர்த்தோம் என அதிமுக தலைமை புலம்பி வருகிறது. நடிகர் கட்சியினால் தமக்கு பாதிப்பு என அதிமுக தலைமை நினைக்கிறது. நடிகர் தனது வேட்பாளரை அடித்ததால் அதிமுகவுக்கு தமிழகத்தில் உள்ள கொஞ்சம், நஞ்சம் இருந்த பெண்கள் ஆதரவும் போய்விட்டது. கேரளம், அசாம், மேற்குவங்கத்தில் இதுபோன்று தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி கிடையாது. தமிழகத்தில்தான் அதிக கெடுபிடி செய்கிறது என்றார் ராமதாஸ்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்றைய பிரசாரம் (30.03.2011)

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று பிரச்சாரம் செய்யும் இடங்கள்

 வேதாரண்யம், 
நாகப்பட்டினம், 
பூம்புகார்,


 

கோவில்பட்டியில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம்

             ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் ஏட்டுச் சுரைக்காயகத்தான் இருக்கும். 1991ஆம் ஆண்டு அளித்த வாக்குறுதிகளையே அவர் நிறைவேற்றவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்

              இந்த முறை திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகளுக்கு போட்டியாக அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் மலிந்து காணப்படுகின்றன.  1991ஆம் ஆண்டு முதல் 1996 வரையிலும் பிறகு 2001 முதல் 2006 வரையிலும் பத்தாண்டுகள் காலம் பதவியில் இருந்தபோது என்னென்ன இலவசங்களை நிவாரண உதவிகளை ஜெயலலிதா ரத்து செய்தாரோ அவற்றையெல்லாம் கலைஞர்தான் மீண்டும் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினார்.

             இப்போது அவற்றை நாங்களும் வழங்குவோம் என்று ஜெயலலிதா கூறுகிறார். வாக்குறுதிகளுக்கும், வாக்குறுதிகளை அளிப்பவர்களுக்கும் ஒரு நம்பகத்தன்மை இருக்க வேண்டும். இதற்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார் என்பதை வைத்துதான் அந்த நம்பகத் தன்மை வரும். எனவே, ஜெயலலிதா அளித்துள்ள வாக்குறுதிகள் எல்லாம் வெறும் ஏட்டளவில் தான் இருக்கும். 1991ல் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளையே அவர் இன்னும் நிறைவேற்றவில்லை.

         2001 முதல் 2006 வரை அரசு ஊழியர்களை ஜெயலலிதா எப்படியெல்லாம் நடத்தினார். ஒரேநாள் உத்தரவில் எத்தனை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பினார் என்பதையெல்லம் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், கலைஞர் கடந்த 5 ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். சொன்னதை செய்திருக்கிறார். சொல்லாததையும் செய்திருக்கிறார் என்றார்.

234 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

         அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், திமுகவைப் போலவே தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
  
மதுரையில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், 

                திமுக தலைவர் கருணாநிதி கடந்த தேர்தலில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதை, செய்திருக்கிறார். மேலும் சொல்லாததையும் செய்திருக்கிறார். ஒவ்வொரு குடும்பமும் பயன் அடைந்துள்ளது. தற்போது வெளியிட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கையால் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள நபரும் பயன் அடைவார்கள். கலைஞர் ஆட்சியில் இருந்தால்தான் பல திட்டஙகள் செயல்படுத்தப்படும் என்று மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். ஆகையால் 234 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.


             அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், திமுகவைப் போலவே தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார் என்றார்.

வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் காடுவெட்டி குருவை எதிர்த்து அதிமுக இளவழகன் போட்டி

           திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு ஜெயங்கொண்டம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  பாமக சார்பில் ஜெயங்கொண்டம் தொகுதியில் வன்னியர் சங்கத்  தலைவர் மாவீரன்  காடுவெட்டி குரு போட்டியிடுகிறார்.

        இந்நிலையில் அதிமுகவின் புதிய பட்டியலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் இளவழகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்படுள்ளது. 2001 -2006ல் அரியலூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் இளவழகன் என்பது குறிப்பிடத்தக்கது.

PMK, AIADMK to slug it out in Neyveli constituency



 


Campaign:T.Velmurugan, PMK MLA, addressing his party workers on Wednesday.

NEYVELI: 

           The battle for the newly created Neyveli Assembly constituency, encompassing the entire Neyveli Township of the NLC and parts of Kurinjipadi and Panruti constituencies, is hotting up with the Pattali Makkal Katchi and the All India Anna Dravida Munnetra Kazhagam candidates gearing for a direct contest.

       Sitting Panruti MLA T. Velmurugan filed his nomination for the Neyveli constituency on PMK ticket on Wednesday. He sought to erase the impression that he is an outsider or from another constituency by stating that “it should not be misconstrued that he has shifted from Panruti to Neyveli. Since his birthplace is Puliyurkattusagai that forms part of Neyveli he is very much a son of the soil.”

           He told The Hindu that he was not a stranger to Neyveli because he had taken up the cause of 14,000 permanent employees and 13,000 contract workmen of the Neyveli Lignite Corporation at various forums and succeeded in getting their demands fulfilled to a fair extent.

Regularisation

            It would be his endeavour to get regularisation for contract workmen in a phased manner. He would hold talks with the NLC management to waive the charges for providing electricity to over 1,000 households with 10,000 population, all daily-wage workers and small-time vendors, living in Blocks 21 and 30 of the Neyveli Township. He said that the NLC management should enhance the annual allocation for peripheral development from Rs. 2 crore to Rs. 5 crore a year.

          He noted that former Union Health Minister Anbumani Ramadoss mooted the idea of converting the NLC general hospital into a medical college and that he would strive to achieve the goal. He would seek suitable compensation and alternative sites for the residents of Thenkuthu and Vanathirayapuram whose houses had developed cracks and cattle heads were scared away by constant (controlled) explosions triggered in the NLC mines.

          Appreciating the contributions made by the officials for improving the NLC performance, he said he would work in close coordination with them to improve the lot of the employees that in turn would lead to increased production and productivity. He would pursue the idea of setting up units for producing feni (a beverage extracted from cashew nuts), and jackfruit pulp and jam. He would impress upon the government and the NLC management to protect and streamline the water sources and take permanent flood control measures.

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் அறிமுகம் செய்யும் கூட்டம்

நெய்வேலி:

      தொழிலாளர்களிடையே இவர் நிரந்தரத் தொழிலாளி, இன்னொருவர் ஒப்பந்தத் தொழிலாளி என பேதம் பார்த்து பணியாற்றவில்லை. அனைவரின் கோரிக்கைக்காகவும் நான் குரல் கொடுத்து போராடியிருக்கிறேன் என நெய்வேலியில் திங்கள்கிழமை நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வேல்முருகன் பேசினார்.  

              நெய்வேலித் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தி.வேல்முருகனை அறிமுகம் செய்யும் கூட்டம் நெய்வேலியில் உள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் குடியிருப்பில் திங்கள்கிழமை நடந்தது. இக்கூட்டத்திற்கு திமுக நகரச் செயலர் புகழேந்தி தலைமைவகித்தார். 

               அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேல்முருகனை அறிமுகம் செய்து வைத்து, அவருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என நெய்வேலி நகர திமுகவினருக்கு உத்தரவிட்டார்.  


இதைத்தொடர்ந்து நெய்வேலித் தொகுதி பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் பேசுகையில்,

                 ""நான் அடிப்படையில் திமுகவில் இருந்து பின்னர் பாமகவில் வளர்ந்து வந்தவன். எனது தொகுதிக்குட்பட்ட மக்களுக்காக நான் குரல் கொடுப்பதில் என்றைக்கும் தயங்கியது கிடையாது. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் உள்ளவன்.  திமுக தலைமைக்கும், பாமக தலைமைக்கும் இடையே ஒரு அணிலாக இருந்து தூது சென்று கூட்டணி அமைய காரணமாக இருந்துள்ளேன்.  

                என்னைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் தவறான அபிப்பிராயம் இருந்தால் அதை நேரிடையாக கேளுங்கள் நான் உங்களுக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளேன்.  நான் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதிலும், இங்குள்ள ஜவகர் பள்ளி ஆசிரியர்கள் பிரச்னை, அப்ரண்டீஸ் இளைஞர்கள் பிரச்னை, வட்டம் 21-30 மக்களின் வாழ்வாதார பிரச்னை, ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்னை என அனைத்து பிரச்னைகளுக்கும் சட்டமன்றத்தில் குரல் கொடுத்து மாநில அரசின் கவனத்தை ஈர்த்துள்ளேன்.  

                நிரந்தரத் தொழிலாளர்களின் போனஸ், ஊக்கத்தொகை பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்ததோடு, இங்குள்ள தொழிற்சங்க நிர்வாகிகளோடு ஒன்றாக அமர்ந்து பிரச்னை முடியும் வரை அவர்களுக்காக போராடியிருக்கிறேன்.  எனது தொகுதி வாசிகளின் பிரச்சனைகள் தீர 24 மணிநேரமும் உழைக்க நான் காத்திருக்கிறேன்'' என்றார் வேல்முருகன்.,  

                   கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மூமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நெய்வேலியில் வசிக்கும் பண்ருட்டி திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரனும் வேல்முருகனுக்கு ஆதரவு அளிக்கவேண்டுமென திமுகவினரை கேட்டுக்கொண்டார். 

பாமக 5வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

                   திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை படிப்படியாக பாமக அறிவித்து வந்தது.
      
        இந்நிலையில் இன்று விடுபட்ட மயிலம் மற்றும் வேதாரண்யம் தொகுதிகளுக்கான பாமக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


மயிலம் தொகுதியில் இரா.பிரகாஷ், 

வேதாரண்யம் தொகுதியில் ந.சதாசிவம் 

              ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று பாமக அறிவித்துள்ளது.

பா.ம.க. தேர்தல் அறிக்கை

          

பா.ம.க. தேர்தல் அறிக்கையை திங்கள்கிழமை வெளியிடுகிறார் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.


பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை   பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் வெளியிட்டார்.


பா.ம.க.வின் தேர்தல் அறிக்கை

நிதி உதவி:

                 வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை மாதம்தோறும் நிதி உதவி வழங்கப்படும். குழந்தைகளை தவறாமல் பள்ளிக்கு அனுப்புவோர், பிறந்தது முதல் 6 வயது வரை இலவச தடுப்பூசி போடுவோர், சொட்டு மருந்துகள் அளிப்போர், மருத்துவப் பரிசோதனைகள் செய்வோர், கர்ப்பிணிகள் எனில் உரிய தடுப்பூசிகள், மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்பவர்கள் ஆகியோருக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.

 சிறப்புத் திட்டம் :



                தனியார் துறை, அரசுசாரா அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சட்டப் பேரவைத் தொகுதி நீடித்த வளர்ச்சித் திட்டம் என்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்மயமாக்குதல், வேளாண்மை வளர்ச்சி, அறுவடைக்கு பிந்தைய மதிப்பு கூட்டல் தொழில்களை வளர்த்தல், வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாக இருக்கும்.

 ஜாதிவாரி கணக்கெடுப்பு: 



             வேளாண் துறைக்கு நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பை முறையாக நடத்த பா.ம.க. துணை நிற்கும். மக்கள் தொகை அடிப்படையில் 100 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க பா.ம.க. குரல் கொடுக்கும்.

நீதித் துறையில் இட ஒதுக்கீடு:



            நீதித் துறையில் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் என்ற உச்சவரம்பையும், கிரீமி லேயரையும் நீக்குதல், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு விகிதாச்சாரத்தை மாநிலங்களே முடிவு செய்து கொள்ள தேவையான சட்ட திருத்தம் செய்வது ஆகியவற்றுக்காக பா.ம.க. பாடுபடும். 

மூகநீதி நாள் 

             பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ம் தேதியை சமூகநீதி நாளாக அறிவிக்க குரல் கொடுப்போம்.

 தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு: 



             இட ஒதுக்கீடு வழங்குவதில் மதம் ஓர் அடிப்படையாகக் கருதப்படக் கூடாது என்கிற வகையில் அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும். வன்னிய கிறிஸ்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு



              அனைத்து வளர்ந்த நாடுகளிலும் உள்ளதுபோல பள்ளிக் கல்வியானது முழுக்க முழுக்க அரசினால் நடத்தப்படும் நிலையை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். பொதுப் பள்ளி முறை, அருகாமை பள்ளி முறை கொண்டு வரப்படும். 6 முதல் 14 வயது வரை அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி என்பது 3 முதல் 14 வயது வரை என்று மாற்றியமைக்கப்படும்.

நீதிபோதனை வகுப்பு



               பள்ளிக் கல்வித் துறையிலிருந்து தொடக்கக் கல்விக் துறையை பிரித்து தனித் துறை உருவாக்கப்படும். பள்ளிகளில் தமிழ் இசை ஒரு பாடமாக சேர்க்கப்படும். நீதிபோதனை வகுப்பு கட்டாயமாக்கப்படும்.

 தாலுகாவுக்கு ஓர் அரசுக் கல்லூரி: 



               தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கட்டுப்படுத்தப்படும். தொழிற்கல்வி நிறுவனங்களில் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும். தாலுகாவுக்கு ஓர் அரசுக் கல்லூரியும், ஒன்றிய அளவில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும், மாவட்டம்தோறும் தமிழிசைக் கல்லூரியும் தொடங்கப்படும். தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் வகையில் பா.ம.க. பாடுபடும்.

 புற்றுநோய் சிகிச்சைக்காக தனி சுழல் நிதி


              ஒரே தடுப்பூசி மூலம் பல நோய்களைத் தடுக்கும் கூட்டுத் தடுப்பூசி முறை கொண்டு வரப்படும். தனியார் மருத்துவமனைகளில் குறைந்தது 15 சதவீத இலவச சிகிச்சை அளிக்க உறுதி செய்யப்படும். புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ.100 கோடியில் தனி சுழல் நிதி உருவாக்கப்படும். 

பூரண மதுவிலக்கு 

            பூரண மதுவிலக்கை செயல்படுத்துவது பா.ம.க.வின் தலையாய நோக்கமாக இருக்கும். குட்கா, பான் மசாலா, மெல்லும் வகை புகையிலை பொருள்களுக்குத் தடை விதிக்கப்படும். சென்னை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றப்படும்.


புதிய மாவட்டங்கள்: 


             6 எம்.எல்.ஏ. தொகுதிக்கு ஒரு மாவட்டம் உருவாக்கப்படும். 

 பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை

                ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடிசைகள் இடிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். தமிழகம் முழுவதும் பனை மரங்கள் நடப்படும். உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகே பனை மரத்தை வெட்ட முடியும் என்கிற சட்டம் கொண்டு வரப்படும். தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படும்.


சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்கள்


                      100 நாள் வேலை திட்டத்தை வேளாண் பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும். மீனவர்களின் உயிர், படகு, கட்டுமரங்களை ஒட்டுமொத்தமாக காப்பீடு செய்ய திட்டங்கள் வகுக்கப்படும். மீன் பிடிக்கத் தடை இருக்கும் காலங்களில் மாதம் ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்படும். சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.

 வீட்டுக்கு ஒருவருக்கு வேலை: 


                 அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் வருமானம் என்ற அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும். 

வணிகர்களுக்கு சுய உதவிக் குழுக்கள் 


           வணிகர்களுக்கு சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 2 லட்சம் சிறு வணிகர்களுக்கு ரூ.50 கோடி கடன் வழங்கப்படும். 


 பேருந்து விரைவுப் போக்குவரத்து முறை


               சென்னை மாநகரில் ஓடும் பஸ்களின் எண்ணிக்கை 6 ஆயிரமாக அதிகரிக்கப்படும். குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ளது போல பேருந்து விரைவுப் போக்குவரத்து முறை கொண்டு வரப்படும்.


சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம்


               அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதியம் பெற வேண்டுமானால் 33 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதை 20 ஆண்டுகளாக குறைக்க வழிவகை செய்யப்படும்.  சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

மத்தியில் ஆட்சி  மொழியாக தமிழ் மொழி 

          மத்தியில் ஆட்சி மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் தமிழை கொண்டுவர வழிவகை செய்யப்படும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.

தமிழ் ஈழமே தீர்வு: 

                  இலங்கையில் தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும். கடைசி கட்ட போரின்போது இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை, போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை அமைப்பு, பன்னாட்டு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்படவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்கள் பாதுகாப்பு 

                 இலங்கை கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் மீன்பிடி உரிமையை உறுதி செய்யவும், கச்சத் தீவை மீட்கவும் பா.ம.க. பாடுபடும் என்று பா.ம.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

DMK, PMK to hold series of meetings today

SALEM: 

           The Dravida Munnetra Kazhagam (DMK)-led alliance has set the campaign mode on motion in 11 Assembly segments of the Salem district.

         The Salem District DMK secretary and Sankagiri candidate Veerapandi S Arumugam has announced that a series of meeting will be organised on Tuesday in Salem, Omalur, Mettur and Edapadi where DMK and PMK candidates are contesting in which PMK founder leader Dr S Ramadoss, its president and Mettur candidate G K Mani, Kongu Munnetra Kazhagam ‘Best' Ramasamy and TNCC President K V Thankgabalu will participate.

            Besides the Indian Union Muslim League state vice-president M P Kader Hussain, Viduthalai Cherthai Katchi Salem district secretary R Navarasan and other district functionaries of alliance partners along with contestants also will take part. The important points in the election manifestoes of DMK, PMK and other alliance parties should be taken to the electorate. While the Salem meeting will be for the functionaries of alliance parties, the other meetings will be held for cadre and functionaries. After the meetings PMK's Dr Ramadoss is expected to begin his campaign from here.

          Meanwhile Thamizhaga Anaithu Nayudus and Nayakkar Mahajana Peravai have extended support to the DMK-led alliance for the Assembly polls. Its state president R K Jayakumar met Mr. Arumugam on Tuesday and conveyed his outfit's decision.