தடுமாறும் நடிகரின் பேச்சைக் கேட்டு தமிழகமே சிரிப்பாய் சிரிக்கிறது என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
சென்னையில் ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க.,வேட்பாளர் சேகர்பாபு, பெரம்பூர் தி.மு.க., கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் ஆகியோரை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டங்களில் பேசிய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்,
தி.மு.க., கூட்டணி முடிவானதும் தலைவர்களை வாழ்த்திப் பேசிய கலைஞர், இது சமூக நீதிக்கான கூட்டணி என்றார். எதிரணி தடுமாறும் நடிகர் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளது. நடிகரின் தடுமாறும் பேச்சைக் கேட்டு தமிழகமே சிரிப்பாய் சிரிக்கிறது. இளைஞர்கள் பலர் சேர்ந்ததும், கட்சி ஆரம்பித்த நடிகர், கோட்டை நாற்காலியில் அமர துடிக்கிறார். சினிமா எடுத்து அதில் முதல்வராக நடித்து, திருப்திப்பட வேண்டியது தான்.
தேர்தல் நேரத்தில் மட்டும் திட்டங்களை அறிவிப்பவர் ஜெயலலிதா. 10 ஆண்டுகள் பதவியில் இருந்தும் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. இனிமேலும் ஒன்றும் செய்யப்போவதில்லை. கருணாநிதி ஆட்சியில் 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். இலவசங்கள் கொடுக்க முடியாது என்றவர்கள், போட்டி போட்டு இலவசத்தை அறிவிக்கின்றனர். இது மக்களிடம் எடுபடாது. கருணாநிதி படிக்க உதவி செய்கிறார். ஜெயலலிதாவோ ஆடு, மாடு கொடுப்பேன் என்கிறார். எல்லாரும் இனி ஆடு, மாடு மேய்க்க வேண்டியது தான்.
தமிழகத்தில் வி.சி.,க்கள் போட்டியிடும் ஒன்பது தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்துள்ளேன். இன்னும் ஒரு தொகுதியில் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. பா.ம.க., போட்டியிடும், 30 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக