வடமாவட்டத்தில் 110 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

  சென்னை :

         வடமாவட்டத்தில் 110 தொகுதிகளில் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை தேடித்தரும் என, ராமதாஸ் பேசினார். கொளத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து, பெரவள்ளூர் சதுக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

              தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில், 30 மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்திற்காக நான் சுற்றியபோது, அங்குள்ள பெண்களிடம், யாருக்கு வாக்கு? என்று கேட்டபோது, கலைஞருக்குத்தான் வாக்கு என்று பரவலாக கூறினார்கள். அந்த மகராசனால்தான் நாங்கள் ராப்பட்டிணி இல்லாமல் சாப்பிடுகிறோம் என்றும் தெரிவித்தனர்.

            முதன்முதலாக பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் ஒரே கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இதனால், வடமாவட்டத்தில் 110 தொகுதிகளில் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை தேடித்தரும். இது சமூக நீதி கூட்டணி. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, அடித்தட்டு மக்கள் முன்னேற மீண்டும் கருணாநிதி முதல் அமைச்சராக வர வேண்டும். அதற்கு, மு.க.ஸ்டாலினுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

0 கருத்துகள்: