பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பது:-
தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவைத் தேர்தல்கள் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளன. இரு மாநிலங்களிலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதற்கு வசதியாக தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு வாக்களிக்கும்படி நான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் புதுவையிலும் நல்லாட்சி தொடர எங்கள் வேண்டுகோளை ஏற்று வாக்களித்த மக்களுக்கு நன்றி. சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, சோனியாகாந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அயராது உழைத்த பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக