மேட்டூர்:
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி, பா.ம.க. வேட்பாளரும், பா.ம.க. மாநில தலைவருமான ஜி.கே.மணி மேட்டூரில்பேட்டி அளித்தார்.
அப்போது மேட்டூர் தொகுதி பா.ம.க. வேட்பாளரும், பா.ம.க. மாநில தலைவருமான ஜி.கே.மணி கூறியது:-
நடந்து முடிந்துள்ள தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த தேர்தலில் வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக அமைந்துள்ளது. இதற்கு காரணம் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சி தான். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டெலிவிஷன் பெட்டிகள், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, சத்துணவில் கூடுதல் முட்டைகள், கலைஞர் காப்பீட்டு திட்டம், வீடு வழங்கும் திட்டம் போன்ற ஏராளமான நலத்திட்டங்களை பொதுமக்கள் எண்ணிப்பார்த்தும், தற்போது தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளவற்றை கருணாநிதி கட்டாயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடனும் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்து உள்ளனர்.
இதற்கும் மேலாக தமிழ்நாட்டில் மக்கள் நலனில் அக்கறை உள்ள பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் ஒரு தலைமையில் சேர்ந்து வலுவான கூட்டணி அமைத்தது. அந்த கூட்டணிக்கு டாக்டர் கலைஞர் தலைமை ஏற்ற காரணத்தாலும், கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்ட காரணத்தாலும், கருத்து வேறுபாடு இல்லாமல் செய்த பிரசாரத்தாலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இந்த கூட்டணியில் இருந்த அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றி ஒன்றையே குறிக்கோள் என செயல்பட்டு இருந்தனர். இது போன்ற முக்கிய அம்சங்களால் இந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே வரும் மே 13-ந்தேதி வாக்கு எண்ணிக்கையின் போது அதிக இடங்களை தி.மு.க. கூட்டணி பெற்று கலைஞர் 6-வது முறையாக முதல்-அமைச்சாராக பொறுப்பு ஏற்பார் என்பது உறுதியாகி விட்டது. இதைபோன்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் அமைச்சராவார். சேலம், தர்மபுரி மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு ஜி.கே. மணி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக