விழுப்புரம் மாவட்டத்தில் பா.ம.க. செல்வாக்கு

          விழுப்புரம் மாவட்டத்தில், தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.போட்டியிட்டனர்.  

போட்டியிட்ட தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் அடிப்படையிலான நிலவரம்:

திண்டிவனம் (தனி): 

            பொது தொகுதியாக இருந்தபோது, 1991, 1996 மற்றும் 2006 தேர்தல்களில் பா.ம.க., தலைமை நிலைய செயலர் கருணாநிதி போட்டியிட்டு, மூன்று முறையும் தோல்வியடைந்தார். மறு சீரமைப்பில் திண்டிவனம் தற்போது தனி தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

              இத்தொகுதியில், 1 லட்சத்து, 88 ஆயிரத்து, 405 வாக்காளர்கள் உள்ளனர். பா.ம.க.,வில் சங்கர், அ.தி.மு.க.,வில், டாக்டர் ஹரிதாஸ்  நேரடி போட்டியில் குதித்தனர். தேர்தலில், 76 ஆயிரத்து, 599 ஆண்கள், 75 ஆயிரத்து, 856 பெண்கள், திருநங்கை ஒருவர் உட்பட, 1 லட்சத்து, 52 ஆயிரத்து, 456 பேர் ஓட்டளித்துள்ளனர்.

       பா.ம.க., நிறுவனர் ராமதாசின் சொந்த ஊர் என்பதால், வேட்பாளர் சங்கருக்கு ஆதரவாக நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று பணியாற்றினர். அ.தி.மு.க., வேட்பாளர் ஹரிதாஸ், மரக்காணம் மீனவ சமுதாய ஓட்டுகள் அதிகளவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். பா.ம.க., இம்முறை வெற்றி பெற வேண்டும் என்ற பா.ம.க., நிறுவனர் ராமதாசின் கனவு நனவாக காத்திருக்கின்றனர். 

மயிலம்: 

            பா.ம.க., சார்பில் பிரகாஷ், அ.தி.மு.க., சார்பில் நாகராஜன் இடையே போட்டி உள்ளது. இங்கு, 2 லட்சத்து, 13 ஆயிரத்து, 236 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 77 ஆயிரத்து, 148 ஆண்கள், 74 ஆயிரத்து, 20 பெண்கள், திருநங்கை ஒருவர் உட்பட, 1 லட்சத்து, 73 ஆயிரத்து, 794 பேர் ஓட்டளித்தனர். பா.ம.க., வேட்பாளருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மேற்பார்வையில், கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைத்தனர். கடைசி வரை, அ.தி.மு.க., வேட்பாளர் மீது அதிருப்தி நீங்கவில்லை. தே.மு.தி.க.,விலும் சரியான ஒத்துழைப்பு இல்லாததால், பா.ம.க., வேட்பாளர் பிரகாஷ்  வெற்றிக்காக  கத்து இருக்கிறார்.

செஞ்சி

            பா.ம.க., சார்பில் கணேஷ் குமார், தே.மு.தி.க., சார்பில் சிவா,  நேரடி போட்டியில் உள்ளனர். மொத்தமுள்ள, 2 லட்சத்து, 13 ஆயிரத்து, 236 வாக்காளர்களில், 87 ஆயிரத்து, 530 ஆண்கள், 86 ஆயிரத்து, 254 பெண்கள், திருநங்கை ஒருவர் உட்பட, 1 லட்சத்து, 73 ஆயிரத்து, 794 பேர் ஓட்டளித்தனர். கடந்த தேர்தல்களில், அ.தி.மு.க., - தே.மு.தி.க., தனியாக பெற்ற ஓட்டுகள் அடிப்படையில், தே.மு.தி.க., வேட்பாளர் சிவா வெற்றி களிப்பில் உள்ளார். ஜாதி அடிப்படையில் தங்களுக்கு தனி செல்வாக்கு இருப்பதாக, பா.ம.க., வேட்பாளர் கணேஷ்குமார் நம்பிக்கையில் உள்ளார்.





0 கருத்துகள்: