பேட்டிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேட்டிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அண்ணா பிறந்த நாளில் அமைச்சரவையை கூட்டி 3 பேரின் தூக்கு தண்டனையை குறைக்க தீர்மானம்: டாக்டர் ராமதாஸ்


திண்டிவனம்:
 
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  அளித்த பேட்டி:
 
               ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். பரமக்குடியில் அஞ்சலி செலுத்த வந்த ஜான்பாண்டியனை கைது செய்ததே இந்த பிரச்சினைக்கு காரணமாகும். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அமைதியாக அகற்றி இருக்க வேண்டும். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கக்கூடாது.

                பறவைகளை சுடுவதற்கு கூட சட்டப்படி அனுமதி கிடையாது. துப்பாக்கி கையில் வைத்திருக்கிற காவல் துறைக்கு மக்களை சுட்டுபொசுக்க யாரும் அதிகாரம் தரவில்லை. இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போர்குற்றம் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா.சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன.

              ஆனால் வழக்கம் போலவே சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் சேர்ந்து கொண்டு இந்த தீர்மானத்தை முறியடிக்க இந்தியா செயல்படுவதாக செய்திகள் வெளி வருகின்றன. இது கண்டிக்கத்தக்கது. 7 கோடி தமிழர்களின் உனர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இந்தியா செயல்பட வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரரறிவாளன் ஆகியோர் தன்டனையை குறைக்க கோரி சட்டசபையில் தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்ப வேண்டும் என கட்சி வித்தியாசம் இன்றி தமிழகத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள்.

            
ண்ணா பிறந்தநாளில் தி.மு.க.-அ.தி.மு.க. 2 கட்சிகளும் கைதிகளுக்கு தண்டனையை குறைப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. அண்ணா பிறந்த நாளில் அமைச்சரவையை கூட்டி 3 பேரின் தூக்கு தண்டனையை குறைக்க தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்ப வேண்டும். இனிவரும் தேர்தல்களில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம். பா.ம.க. தலைமையில் சேரும் கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்.

                புதுவையில் ரங்கசாமி புதிதாக கட்சி தொடங்கினார். மக்கள் ஆதரவோடு அங்கு ஆட்சி அமைத்துள்ளார். எனவே இடை தேர்தலில் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அங்கு ஆதரவு தரும் வகையில் மற்ற கட்சிகள் எதுவும் கண்ணுக்கு புலப்பட வில்லை. இவ்வாறு அவர் கூறினார். 
 
 
 

உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்


 http://dinamani.com/Images/article/2011/9/10/ramadoss.jpg


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் அளித்த பேட்டி


           விகிதாச்சார அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும். கட்சிகள் பெறும் ஓட்டுகள் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்களை கட்சி நியமிக்கும். அப்படி நடை பெறும்போது இடைத் தேர்தல் நடத்த தேவையில்லை. பணச்செலவு ஏற்படாது.

           திருச்சி மேற்கு தொகுதியில் பா.ம.க. போட்டியிடவில்லை. உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்துகிறோம். உள்ளாட்சி தேர்தலில் இரண்டு, மூன்று ஓட்டுகள் போடனும். அதனால் வாக்கு சீட்டு முறையை பின்பற்ற வேண்டும்.  மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்வது போல ஊராட்சி ஒன்றிய தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவரையும் மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.  மோனோ ரெயில் திட்டத்தால் நன்மை கிடையாது. அதை கைவிட வேண்டும். அரசு உறுதியாக இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, மது விலக்கை கேட்கிறவர்களே கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று கூறியுள்ளார். கள்ளச் சாராயம் விற்பது யார் என்று அவர் கூற வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

             கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக்காக யாரும் அணுகவில்லை. ம.தி.மு.க. வில் திராவிட என்ற வார்த்தை உள்ளது. அதை ஏற்க முடியாது. திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம். அரசு அமைக்கின்ற துணை நகரம் அரசு சொந்த நிலத்தில் அமைகிறது. அதனால் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

           தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளையும் அகற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பா.ம.க. மட்டுமே மக்களுக்காக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தால் முறைகேடு நடக்க வழி வகுக்கும். அதனால் ஒரே கட்டமாக நடத்த வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின்போது ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உடன் இருந்தனர்.

தரமான இலவசக் கல்வி: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

கிருஷ்ணகிரி:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று கிருஷ்ணகிரியில் அளித்த பேட்டி: 

              இப்போது நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் சமச்சீர் கல்வி திட்டம் என்பது முழுமையான சமச்சீர் கல்வி திட்டமல்ல. தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது பொது பாடத்திட்டம்தான். இது சமச்சீர் கல்வி திட்டத்திற்கான ஒரு தொடக்கம். அடுத்த ஆண்டிலிருந்து முழுமையாக சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வரவேண்டும்.   பொது பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், மெட்ரிக் கல்வி வாரியமும், ஆங்கிலோ இந்தியன் கல்வியும் தொடர்கிறது.

              இந்த கல்வி வாரியத்தை கலைக்கவேண்டும். பேராசிரியர் முத்துக்குமரன் குழு அளித்த பரிந்துரையில் சமச்சீர் கல்வி என்றால் பாடம் கற்பித்தல், மதிப்பிடுதல், தேர்வு முறை, பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை அனைத்தும் ஒரேசீராக, தரமாக அமைய வேண்டும் என்பதாகும். சமச்சீர் கல்வி குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தரமான கல்வி வேண்டும் என்று கூறியுள்ளது. இலவசமான கட்டாய மற்றும் தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும்.  

                 காமராஜர் ஆட்சி காலத்தில் 18 மெட்ரிக் பள்ளிகள் இயங்கிவந்தது. ஆனால் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தபிறகு 11 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. ஸ்டேட்போர்டு பள்ளிகள் 45 ஆயிரம் உள்ளன. இவற்றில் 1/4 பங்கு மெட்ரிக் பள்ளிகள் தனியாரிடம் உள்ளது. அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற சட்டத்தின்படி பார்த்தால் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இருக்கக்கூடாது. அரசு இலவசங்கள் கொடுப்பதை நிறுத்தி கல்வியை இலவசமாகவும் தரமாகவும் தரவேண்டும்.

                  சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்க அரசு அனுமதிக்கக்கூடாது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் எந்த திராவிட கட்சிகளுடனும் கூட்டணி வைக்கமாட்டோம். மக்களுக்கான அரசியல் என்ற செயல் திட்டத்தை நாங்கள் இன்னும் ஒருமாதத்தில் சென்னையில் வெளியிடுவோம்.  

           இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நடித்த ஆதர்ஷன் என்ற படத்தில் இடஒதுக்கீட்டை கொச்சைப்படுத்தும் விதமாக சில காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் நாளை (இன்று) தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிடவேண்டும். அல்லது அந்த படத்திற்கு தமிழகத்தில் தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி

 பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி

          பெண்கள் உட்பட அனைவரையும் கல்வி கற்க வைக்க வேண்டும். அனைவரும் கல்வி கற்றால் தான், இந்த சமுதாயம் உயர முடியும். இதற்கு, சமச்சீர் கல்வி முறை வேண்டும். பணக்காரர்களுக்கு கிடைக்கும் மருத்துவம், ஏழை மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.

அதிமுக அணிக்கு தோல்வி பயம் வந்துள்ளது: பாமக நிறுவனர் ராமதாஸ்

ராமதாஸ்
சிதம்பரம்:

              திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு வைகோ ஆதரவு அளிக்க விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் என்று பாமக நிறுவனர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டி:

                தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் அதிமுக அணிக்கு தோல்வி பயம் வந்துள்ளது. கொள்கை திட்டங்கள், வாக்குறுதிகள் பற்றி பேசாமல் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து ஜெயலலிதா விமர்சனம் செய்து வருகிறார்.இதுபோன்று எந்த ஒரு மாநிலத்திலும் அரசியல் அநாகரிகம் இல்லை. தலைவர்களின் குடும்பங்களை பற்றி யாரும் விமர்சித்தது இல்லை. அண்மையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை பற்றி பாஜக குழுவினர் ஒரு முறை தவறான தகவலை வெளியிட்டனர்.

               அதற்காக அக்கட்சி மூத்தத் தலைவர் அத்வானி உடனே வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதினார். இது அரசியல் நாகரிகம், பண்பாடு.ஆனால் இங்கு ஜெயலலிதா தனது பிரசாரத்தில் முழுக்க முழுக்க தனி நபர் விமர்சனம் செய்து வருகிறார். இதை அவர் தவிர்க்க வேண்டும்.அவருடன் கூட்டணி சேர்ந்துள்ள நடிகர் நிதானமிழந்து பேசி வருகிறார். அந்த நடிகர் திமுக, பாமக கூட்டணி கொள்கையற்ற கூட்டணி என கூறி வருகிறார்.

              திமுக, பாமக இரு கட்சிகளும் இடஒதுக்கீடு, சமூகநீதி, இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி, சமச்சீர்கல்வி, இருமொழிக் கொள்கை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றம், சிறுபான்மை மக்கள் பாதுகாப்பு, மதச்சார்பின்மை, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதற்கேற்ப இடஒதுக்கீடு, மத்திய, மாநில தமிழ் ஆட்சிமொழி, நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழி ஆகிய கொள்கைகளில் பாமகவுக்கும், திமுகவுக்கும் ஒற்றுமையும் உடன்பாடும் உள்ளது.

                 அந்த வகையில் திமுக, பாமக கொள்கைக் கூட்டணி, லட்சியக் கூட்டணி. அதிமுக மற்றும் நடிகர் சேர்ந்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி.தற்போது நடிகர் கட்சியை ஏன் சேர்த்தோம் என அதிமுக தலைமை புலம்பி வருகிறது. நடிகர் கட்சியினால் தமக்கு பாதிப்பு என அதிமுக தலைமை நினைக்கிறது. நடிகர் தனது வேட்பாளரை அடித்ததால் அதிமுகவுக்கு தமிழகத்தில் உள்ள கொஞ்சம், நஞ்சம் இருந்த பெண்கள் ஆதரவும் போய்விட்டது. கேரளம், அசாம், மேற்குவங்கத்தில் இதுபோன்று தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி கிடையாது. தமிழகத்தில்தான் அதிக கெடுபிடி செய்கிறது என்றார் ராமதாஸ்.