ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் ஏட்டுச் சுரைக்காயகத்தான் இருக்கும். 1991ஆம் ஆண்டு அளித்த வாக்குறுதிகளையே அவர் நிறைவேற்றவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்
இந்த முறை திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகளுக்கு போட்டியாக அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் மலிந்து காணப்படுகின்றன. 1991ஆம் ஆண்டு முதல் 1996 வரையிலும் பிறகு 2001 முதல் 2006 வரையிலும் பத்தாண்டுகள் காலம் பதவியில் இருந்தபோது என்னென்ன இலவசங்களை நிவாரண உதவிகளை ஜெயலலிதா ரத்து செய்தாரோ அவற்றையெல்லாம் கலைஞர்தான் மீண்டும் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினார்.
இப்போது அவற்றை நாங்களும் வழங்குவோம் என்று ஜெயலலிதா கூறுகிறார். வாக்குறுதிகளுக்கும், வாக்குறுதிகளை அளிப்பவர்களுக்கும் ஒரு நம்பகத்தன்மை இருக்க வேண்டும். இதற்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார் என்பதை வைத்துதான் அந்த நம்பகத் தன்மை வரும். எனவே, ஜெயலலிதா அளித்துள்ள வாக்குறுதிகள் எல்லாம் வெறும் ஏட்டளவில் தான் இருக்கும். 1991ல் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளையே அவர் இன்னும் நிறைவேற்றவில்லை.
2001 முதல் 2006 வரை அரசு ஊழியர்களை ஜெயலலிதா எப்படியெல்லாம் நடத்தினார். ஒரேநாள் உத்தரவில் எத்தனை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பினார் என்பதையெல்லம் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், கலைஞர் கடந்த 5 ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். சொன்னதை செய்திருக்கிறார். சொல்லாததையும் செய்திருக்கிறார் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக