ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் பொன்னுசாமியை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம்

ஜோலார்பேட்டை 

             ஜோலார்பேட்டை சந்தைக் கோடியூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் ஜோலார் பேட்டை தொகுதி பா.ம.க. வேட்பாளர் என்ஜினியர் பொன்னுசாமியை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். 
 
அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:-

                  வேலூர் மாவட்டத்தை 2 ஆக பிரித்து திருப்பத்தூரை தலைநகராக கொண்ட புதிய மாவட்டம் அறிவிக்கவும், ஏலகிரிமலை கோடை வாசஸ்தலைமாக அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். கடந்த 5 ஆண்டுகளில் கலைஞர் ஆட்சியில் செய்த சாதனைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த தேர்தலின்போது, சொன்ன வாக்குறுதிகளையும், சொல்லாதவற்றையும் நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். அதனால் அவர் தற்போது அறிவித்துள்ள வாக்குறுதிகளை மக்கள் நம்புகிறார்கள். ஆனால் ஜெயலலிதா நம்பகத்தன்மை அற்றவர், அவர் இதுவரையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது கிடையாது. அப்படி இருக்கையில் அவர் எப்படி இலவசங்களை தருவார் என யோசித்து பார்க்க வேண்டும்.

                  கச்சத்தீவை மீட்பேன் என்றார். அதற்காக என்றாவது போராட்டம் நடத்தி இருக்கிறாரா? சேது சமுத்திர திட்டம் ஒரு கால கட்டத்தில் அமையும் என்றார் ஜெயலலிதா. ஆனால் தற்போது சுப்பிரமணியசாமியை விட்டு அத்திட்டத்தை சீர்குலைத்து, திட்டம் நடைபெறாமல் தடுக்க உச்சநீதி மன்றத்தில் தடையானை வாங்குகிறார். இப்படி இருக்கும் ஜெயலலிதா தனது வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றமாட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

0 கருத்துகள்: