பொன்னுசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொன்னுசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாமக நிறுவனர் ராமதாஸ் குடும்பத்தினருடன் ஏலகிரிமலைக்கு கோடை சுற்றுலா

             பாமக நிறுவனர் ராமதாஸ்  மற்றும்  முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஏலகிரிமலைக்கு வந்தனர். பாமக மாநில தலைவர் ஜி.கே.மணியும் அவர்களுடன் வந்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் தங்கியிருக்கும் விடுதியை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

             இந்நிலையில் நேற்று பாமக வேட்பாளர்களான ஆற்காடு இளவழகன், ஜோலார்பேட்டை பொன்னுசாமி, பர்கூர் டி.கே.ராஜா ஆகியோர் ராமதாசை சந்தித்தனர். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அணைக்கட்டு பாமக வேட்பாளர் கலையரசு உட்பட பிற வேட்பாளர்களும் ராமதாசை சந்திக்க உள்ளனர்.

             கட்சி நிர்வாகிகள் திரண்டு  சென்று  மருத்துவர்  அய்யாவை சந்திக்க  திரண்டனர். மருத்துவர்  அய்யா குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க வந்துள்ளதால் கட்சியினர் யாரும் சந்திக்க இது தக்க சமயம் இல்லை .என்று  ராமதாஸ் கூறினார். ஆனாலும் நிர்வாகிகள் பலர் ஏலகிரி மலையிலேயே வேறு விடுதிகளில் தங்கி அய்யாவை சந்திக்க உள்ளனர். ராமதாஸ் மற்றும் குடும்பத்தினர் வருகிற 7ம் தேதி வரை ஏலகிரியில் தங்கி இருப்பார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் பொன்னுசாமிய ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்


ஜோலார்பேட்டையில் பொன்னுசாமியை ஆதரித்து பிரசாரம்: 6-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி- டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு


ஜோலார்பேட்டை:

          ஜோலார்பேட்டை தொகுதி பா.ம.க. வேட்பாளர் பொன்னுசாமிய ஆதரித்து திருப்பத்தூர் ஆசிரியர்நகர், வக்கணமபட்டி, பொன்னேரி ஆகிய இடங்களில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார்.

அப்போது முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் பேசியது

               6-வது முறையாக கலைஞர் ஆட்சியில் 108 ஆம்புலன்ஸ் மூலம் பல குடும்பங்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டு பல குடும்பத்தினர் பயனடைந்து உள்ளனர். எனவே தமிழகத்தில் மீண்டும் 6-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. இங்கே போட்டியிடும் ஜோலார் பேட்டை தொகுதி பா.ம.க. வேட்பாளர் பொன்னு சாமிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

           நிகழ்ச்சியில டி.கே.ராஜா எம்.எல்.ஏ., ஒன்றிய தி.மு.க. செயலாளர் சத்தியமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர்கள் அண்ணாதுரை, கிருபாகரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கே.சி.அழகிரி, இளங்கோ, மாவட்ட கவுன்சிலர் குட்டிமணி, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் பொன்னுசாமியை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம்

ஜோலார்பேட்டை 

             ஜோலார்பேட்டை சந்தைக் கோடியூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் ஜோலார் பேட்டை தொகுதி பா.ம.க. வேட்பாளர் என்ஜினியர் பொன்னுசாமியை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். 
 
அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:-

                  வேலூர் மாவட்டத்தை 2 ஆக பிரித்து திருப்பத்தூரை தலைநகராக கொண்ட புதிய மாவட்டம் அறிவிக்கவும், ஏலகிரிமலை கோடை வாசஸ்தலைமாக அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். கடந்த 5 ஆண்டுகளில் கலைஞர் ஆட்சியில் செய்த சாதனைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த தேர்தலின்போது, சொன்ன வாக்குறுதிகளையும், சொல்லாதவற்றையும் நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். அதனால் அவர் தற்போது அறிவித்துள்ள வாக்குறுதிகளை மக்கள் நம்புகிறார்கள். ஆனால் ஜெயலலிதா நம்பகத்தன்மை அற்றவர், அவர் இதுவரையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது கிடையாது. அப்படி இருக்கையில் அவர் எப்படி இலவசங்களை தருவார் என யோசித்து பார்க்க வேண்டும்.

                  கச்சத்தீவை மீட்பேன் என்றார். அதற்காக என்றாவது போராட்டம் நடத்தி இருக்கிறாரா? சேது சமுத்திர திட்டம் ஒரு கால கட்டத்தில் அமையும் என்றார் ஜெயலலிதா. ஆனால் தற்போது சுப்பிரமணியசாமியை விட்டு அத்திட்டத்தை சீர்குலைத்து, திட்டம் நடைபெறாமல் தடுக்க உச்சநீதி மன்றத்தில் தடையானை வாங்குகிறார். இப்படி இருக்கும் ஜெயலலிதா தனது வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றமாட்டார். இவ்வாறு அவர் பேசினார்.