பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஏலகிரிமலைக்கு வந்தனர். பாமக மாநில தலைவர் ஜி.கே.மணியும் அவர்களுடன் வந்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் தங்கியிருக்கும் விடுதியை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று பாமக வேட்பாளர்களான ஆற்காடு இளவழகன், ஜோலார்பேட்டை பொன்னுசாமி, பர்கூர் டி.கே.ராஜா ஆகியோர் ராமதாசை சந்தித்தனர். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அணைக்கட்டு பாமக வேட்பாளர் கலையரசு உட்பட பிற வேட்பாளர்களும் ராமதாசை சந்திக்க உள்ளனர்.

கட்சி நிர்வாகிகள் திரண்டு சென்று மருத்துவர் அய்யாவை சந்திக்க திரண்டனர். மருத்துவர் அய்யா குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க வந்துள்ளதால் கட்சியினர் யாரும் சந்திக்க இது தக்க சமயம் இல்லை .என்று ராமதாஸ் கூறினார். ஆனாலும் நிர்வாகிகள் பலர் ஏலகிரி மலையிலேயே வேறு விடுதிகளில் தங்கி அய்யாவை சந்திக்க உள்ளனர். ராமதாஸ் மற்றும் குடும்பத்தினர் வருகிற 7ம் தேதி வரை ஏலகிரியில் தங்கி இருப்பார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக