பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

           ‘’விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒவ்வோர் ஆண்டும் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விருதுகள் வழங்கி வருகிறது. 2011ம் ஆண்டுக்கான விருதுகள் மே மாதம் இறுதியில் நடைபெறும்.




           ‘அம்பேத்கர் சுடர்’ விருது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கும்,   ‘பெரியார் ஒளி’ விருது திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கும்,   ‘காமராசர் கதிர்’விருது மூத்த எழுத்தாளர் சோலைக்கும்,   ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது பவுத்த பெரியார் சுந்தரராச (மறைவு) னுக்கும்,  ‘காயிதே மில்லத் பிறை’ விருது  பேராசியிரியர் காதர்மைதீனுக்கும்,   ‘செம்மொழி ஞாயிறு’ விருது கவிஞர் தணிகைச்செல்வனுக்கும் வழங்கப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்: