திண்டிவனத்தில் பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தை முடித்தார்

திண்டிவனம்:

          பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் நேற்று பிரசாரத்தை முடித்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காந்தியார் திடலில் பா.ம.க., வேட்பாளர் சங்கரை ஆதரித்து பிரசார பொதுக் கூட்டம் நேற்று நடந்தது.

மாலை 4.40 மணிக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது

             :இது ஜனநாயக முற்போக்கு கூட்டணி. எதிரணியில் ஜனநாயகமும் இல்லை; முற்போக்கும் இல்லை. கருணாநிதியை 5 நிமிடத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் யார் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். ஜெ.,வையோ 10 நாட்கள் அல்ல, ஒரு மாதமானாலும் தொடர்பு கொள்ள முடியாது. 

            இது எனக்கு மட்டுமல்ல, இப்போது அந்த கூட்டணியில் உள்ள கம்யூ., கட்சி தோழர்களும் இதை கூறுவர்.கருணாநிதியின் 10 ஆண்டு சாதனைகளையும், ஜெ.,வின் 10 ஆண்டு சாதனைகளையும் தராசில் எடை போடுங்கள். கருணாநிதி பக்கம் 1,000 மடங்கு கீழே இறங்கும். இந்த தேர்தலில் கருணாநிதி ஆதரவு அலை வேகமாக வீசுகிறது. ஜெ., ஆளத் தகுதியற்றவர். அவர் ஆட்சிக்கு வரக்கூடாது.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

0 கருத்துகள்: