மயிலம், செஞ்சி தொகுதி பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்

செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் மயிலம், செஞ்சி தொகுதி பா.ம.க., வேட்பாளர்களை ஆதரித்து வீரணாமூர், நெகனூர், மேல்மலையனூர், செஞ்சி ஆகிய இடங்களில் ராமதாஸ் பேசியது:

             ஒழுங்கு முறை விற்பனை கூடம் ஒழுங்கில்லாத விற்பனை கூடமாக உள்ளது. விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய பலநாள் ஆகிறது. வெயில் காலம் போன பின், நானே செஞ்சிக்கு வந்து போராட்டம் நடத்துவேன். போராட்டம் நடத்துவது, எனக்கு திருப்பதி லட்டு சாப்பிடுவது மாதிரி. ஜெ., கோவையில் நடத்திய கூட்டத்தில் பிரகாஷ் கரத், நாயுடு வந்தனர். இவர்களுக்கு தமிழ்நாட்டில் என்ன செல்வாக்கு உள்ளது. 


           இவர்கள் சொல்லி இங்கே யார் ஓட்டு போடுவர்? கூட்டணியில் உள்ள நடிகர் அந்த கூட்டத்திற்கு போகவில்லை. அவர் வந்திருந்தால் கூட்டம் பாதியில் கலைந்திருக்கும். அவர், "ஆப்' அடித்துவிட்டு எங்களுக்கு ஆப்பு அடியுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.  விஜயகாந்தும், ஜெ.,வும் ஒரே மேடையில் பேச வேண்டும் என ஆசைப்பட்டோம். எங்கள் ஆசை நிராசையாகி விட்டது. இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

0 கருத்துகள்: