காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

காஞ்சிபுரம்:"

           "ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், கருணாநிதி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நிறுத்தி விடுவார்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் அன்புமணி ராமதாஸ் பா.ம.க., வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து பேசியது:

           காஞ்சிபுரத்தில் வெற்றி பெற்றால் தான் கருணாநிதி ஆட்சி அமைக்க முடியும். கருணாநிதி வெற்றி பெற்றால் பல்வேறு திட்டங்கள் வந்து சேரும்.
 
           10 ஆண்டுகள் ஆட்சி செய்த ஜெயலலிதா ஆட்சியில் ஏதேனும் திட்டங்களை நிறைவேற்றியுள்ளாரா? விஜயகாந்த் வேட்பாளர்களை அடிக்கிறார். ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சேர்ந்து பிரசாரம் செய்தால், நம்மை அடித்து விடுவார் என்ற பயத்தில் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவில்லை."ஆப்' அடித்தால் ஆப்பு அடிப்பேன் என்றார். ஒரு தலைவர் என்றால் ஒழுக்கமானவராக இருக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்களை, ஜெயலலிதா நிறுத்துவது வழக்கமாக உள்ளது.
 
             கருணாநிதி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கினார். நெசவாளர்களுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கினார். மக்களின் பசியை போக்கியவர். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ஜெயலலிதா ஆடு, மாடு இலவசமாக தருகிறேன் என்கிறார். நம் பிள்ளைகளை ஆடு, மாடு மேய்க்க சொல்கிறார். எனவே, நீங்கள் மாம்பழ சின்னத்திற்கு வாக்களியுங்கள்.இவ்வாறு அன்புமணி பேசினார்.

0 கருத்துகள்: