வேளச்சேரி:
வேளச்சேரி தொகுதி பா.ம.க., வேட்பாளர் ஜெயராமனை ஆதரித்து, துணை முதல்வர் ஸ்டாலின் பேசியது:
ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்துள்ள விஜயகாந்த் நிதானமின்றி அடிப்பார், குடிப்பார். சினிமாவில் கதாநாயகனாக இருந்த அவர், அரசியலில் காமெடியனாக திகழ்கிறார். நான் சென்னை மாநகர மேயராக பொறுப்பேற்ற போது, மாநகராட்சி பள்ளிகள் கல்வியில் பின்தங்கியிருந்தன. அதன் கல்வித் தரத்தை உயர்த்தி, தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றிக் காட்டினேன். சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், 10 மேம்பாலங்கள் கட்டியுள்ளேன். தற்போது, செம்மொழிப்பூங்கா, அடையாறு பூங்கா, மழைநீர் கால்வாய்கள் உள்ளிட்ட பல அமைக்கப்பட்டுள்ளன.
பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. அதில், தற்போது 35 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தி.மு.க., ஆட்சியில் 52 தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன. அதில், மூன்று லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் .நாங்கள் எல்லாம் உண்மையான வாரிசுகள். எங்களை தத்தெடுக்கவில்லை. தி.மு.க., ஆட்சியில் வேளச்சேரி தொகுதிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளோம் என்ற நம்பிக்கையில் உங்களிடம் ஓட்டு கேட்கிறேன்.இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக