பாமக யாருடன் கூட்டணி? ஜனவரியில் அறிவிப்பு

பெரம்பலூர்:

             வரும் சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஜனவரி மாதம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார் என்று  கட்சியின் மாநிலத் தலைவர் கோ.க.மணி தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவை தொகுதியில் இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கான தேர்தல் பணிக் குழுப் பயிற்சிக் கூட்டம் குன்னத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் கோ.க. மணி அளித்த பேட்டி:

                 தமிழகத்தில் அதிக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களையும் வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

              மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி, பாதிப்பின் அளவை கணக்கீடு செய்து, மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியை கூடுதலாகப் பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

              வரும் சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஜனவரி மாதத்தில் அறிவிப்பார் என்றார் அவர்.

0 கருத்துகள்: