அமெரிக்காவைப்போல் இந்தியாவிலும் 108 ஆம்புலன்சை அறிமுகப்படுத்தியது நான்: டாக்டர் அன்புமணி பேச்சு


செந்துறை:
                    அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா அலுவலகம் பின்புறம் பா.ம.க. இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வந்தவர்களை மாவட்ட செயலாளர் வைத்தி வரவேற்றார்.

                முகாமில் பா.ம.க. நிறு வனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி , பா.ம.க. தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு, சமூகநீதிப் பேரவை மாநில செயலாளர் பாலு, மாநில துணை செயலா ளர் பாலு ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்டு இளை ஞர்களுக்கு பயிற்சி அளித்து சிறப்புரை ஆற்றினார்கள்.
 இதில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி பேசியது:-             இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வரதட்சணை வாங்கக் கூடாது. மது அருந்தக்கூடாது. புகையிலையை பயன்படுத்தக் கூடாது என்று உறுதி ஏற்க வேண்டும். தமிழ்நாட்டில் 21/2 கோடி வன்னியர்கள் உள்ளனர். அவற்றில் 1 கோடி வன்னிய வாக்காளர்கள் உள்ளனர்.

              இவர்கள் மட்டும் பா.ம.க.விற்கு வாக்களித்தால் 100 தொகுதிகளில் நாம் வெற்றி பெற முடியும். நமது பலத்தை பென்னாகரம் தொகுதி பார்முலா மூலம் நிருபித்துள் ளோம். இதனை வரும் சட்ட மன்ற தேர்தலிலும் நிரூபிக்க வேண்டும். அதற்கு நீங்கள் முன்பு வன்னியர் சங்க காலத் தில் இருந்து நமக்காக பாடு பட்ட நமது முன்னோர்களை சந்தித்து அவர்களின் ஒத் துழைப்பை பெற வேண்டும். மாற்றுக் கட்சிக்கு சென்ற நமது தம்பிமார்களிடம் பேசி நமது கட்சிக்கு கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.
                 பா.ம.க. மட்டுமே வன்னியர்களின் உரிமைக்காக போராடும் கட்சி. வேறு எந்த கட்சி எம்.எல்.ஏ.வும் சட்ட மன்றத்தில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பேச முடியாது. வன்னி யர்கள் ஆட்சிக்கு வந்தால்தான் நாம் வாழ முடியும். நான் மத்திய மந்திரியாக இருந்த போது உலக அரங்கில் சிறந்த அமைச்சராக பாராட்டப்பட்டு 3 விருதுகளை பெற்றேன். ஐ.நா.சபை தலைவர் எனது அலுவலகத்திற்கு வந்து என்னை சந்தித்து பாராட்டி சென்றார். இது உலக அளவில் ஒரு தமிழனுக்கும், வன்னிய ருக்கும் கிடைத்த பெருமையாகும்.                 நான் அமெரிக்கா சென்ற போது அங்கு 113 என்ற எண்ணை அழைத்தால் 2 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து நிற்கும். இதனை கண்ட நான் இதேபோன்ற வசதியை நம் இந்திய மக்களும் பெற வேண் டும் என்பதற்காக உடனடியாக 950 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி 3 மாத காலம் திட்ட மிட்டு இந்தியாவில் 14 மாநி லங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையை துவங்கினேன். 80 சதவீதம் சிகிச்சை ஆம்புலன் சிலேயே செய்ய வசதி ஏற்படுத்தி கொடுத்தேன். டாக்டர் ராமதாஸ் ஆணைக்கிற்கேற்ப நமது ஜனாதிபதிக்கு கிடைக்கும் மருத்துவ வசதி கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து அரசு மருத்துவ மனைகளுக்கும் நவீன வசதி களை ஏற்படுத்திக் கொடுத் தேன்.                தமிழகத்தில் பா.ம.க. தயவில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. டாக்டர் ராமதாஸ் யாரை கைகாட்டு கிறோரோ அவரே முதல்வராக முடியும். அதற்கு தம்பி, தங்கைமார்களான நீங்கள் புரட்சியை ஏற்படுத்த இந்த பயிற்சி முகாமில் உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு டாக்டர் அன்புமணி பேசினார்.                விழாவில் அரியலூர் மாவட்ட செயலாளர் வைத்தி அன்புமணிக்கு வெள்ளி கிரீடம் அணிவித்தார். மாநில துணைத் தலைவர் உலக.சாமிதுரை பயிற்சியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு 1000 பனியன்களும், வன்னியர் கல்வி கோவிலுக்கு ரூ.10 ஆயிரம் நிதியும் வழங்கினார். மாநில தொழிற்சங்க துணைத் தலைவர் சோழன்குடிக்காடு குமார் வீரவாள் பரிசளித்தார். இம்முகாமில் ஒன்றிய, நகர, இளைஞரணி, இளம்பெண்கள் அணி, கிளை நிர்வாகிகள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

0 கருத்துகள்: