பெரம்பலூர்:
கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பாமகவைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கான பயிற்சி முகாம் செந்துறையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
கல்வி, விவசாயம் போன்றவற்றில் மாற்றம் கொண்டுவர வேண்டும். ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு ஏக்கருக்கு 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற பாமக ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.
பின்னர் பேசிய பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்,
பிற்படுத்தப்பட்டோருக்கு ராமதாஸ் இடஒதுக்கீடு பெற்றுத் தந்ததால்தான் சாதாரண மக்களும் உயர்கல்வி பயில முடிந்தது. மதுவை ஒழிக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மது விற்பனை ஆண்டுக்கு ஆயிரத்து நானூறு கோடி ரூபாய். ஆனால் இப்போது 15 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் மதுக்கடைகளை ஒழிக்கும் போராட்டம் நடைபெறும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக