வேலூர் :
வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லை என்றும், வன்னியர்கள் ஒற்றுமையாக இருந்தால் 100 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார். வேலூர் அருகே உள்ள பொய்கையில் நடந்த திருமண விழா ஒன்றில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டார்.
திருமண விழாவில் பேசிய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்
தமிழகத்தில் இதுவரை தாழ்த்தப்பட்ட சமுயத்தினர், வன்னியர்கள் முதல் அமைச்சர் ஆனதில்லை. ஏன் என கேட்டால் வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லை. 1989 இட ஒதுக்கீடு போராட்டத்துக்கு பின் பல்வேறு நிலைகளில் வளர்ந்துள்ளோம். புதிய கட்சி துவங்கியவர்கள் வன்னியர்களை கொடி பிடிக்க சொல்கின்றனர். ஆனால், அவர்களுக்கு ஒன்றும் செய்வதில்லை. வன்னியர்களிடம் ஒற்றுமை இருந்தால் 100 தொகுதிகளில் ஜெயிக்கலாம். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் ஒத்துழைத்தால் 130 தொகுதிகளில் வெற்றி பெற்று நாமே ஆட்சி செய்யும் நிலை வரும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக