செஞ்சி:
வன்னியர் சமுதாயத்துக்காக 30 ஆண்டுகளாக பாடுபட்டு இட ஒதுக்கீட்டை மட்டுமே பெற முடிந்தது. ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
செஞ்சியில் நடைபெற்ற வன்னியர் சங்க இளைஞர்கள், இளம்பெண்கள் நிர்வாகிகள் கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:
30 ஆண்டுகளுக்கு முன் வன்னியர் சமுதாயத்தில் 3 டாக்டர்கள் மட்டுமே இருந்தார்கள். தற்போது 50 ஆயிரம் டாக்டர்கள் உள்ளார்கள்; 10 ஆயிரம் வழக்கறிஞகள் உள்ளார்கள். பல்வேறு துறையிலும் பணியில் உள்ளார்கள். இவை எல்லாம் இட ஒதுக்கீடு பெற்ற பிறகு வந்தவை. இந்த இட ஒதுக்கீட்டைக் கூட தனியாக தரவில்லை 107 சாதியை சேர்த்துதான் கொடுத்தார்கள். மற்ற முன்னேறிய ஜாதிகளுக்கு இணையாக தாழ்த்தப்பட்ட ஜாதிகளை உயர்த்தியுள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி.
அவர் என்னென்ன செய்தார் என்பது குறித்து ஒரு பக்க அளவுக்கு ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் வெளிவந்துள்ளது.ஆந்திரம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் சில பிரிவு மக்களைத் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வர முடியாது. அதேபோல வன்னியர் சமுதாயம் அதிகம் உள்ள தமிழ்நாட்டில் வன்னியர் ஆட்சிக்கு வர முடிவில்லை.இதற்கு வன்னியர்களிடத்தில் ஒற்றுமை இல்லாததே காரணம்.
விழுப்புரத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் தனியாக நின்று பாமக வெற்றி பெற முடியும் செஞ்சி தொகுதியில் நாம் தனியாக நின்றாலும் வெற்றி பெற முடியும். ஒரு இளைஞன் ஒரு கிராமத்தில் 60 ஓட்டுகளைப் பெற முடியும். இளைஞர்களிடத்தில் ஆற்றல், திறமை உள்ளது. ஆதலால் இளைஞர்களிடத்தில் கட்சியை ஒப்படைக்கிறேன். இவ்வாறு என்றார் ராமதாஸ். மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, மேல்மலையனூர் எம்.எல்.ஏ. பா.செந்தமிழ்ச்செல்வன், மாவட்டச் செயலர் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக