சென்னை:
ஏழைகளுக்கு இலவசங்கள் வழங்குவதில் எந்த தவறும் இல்லை என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் பாமக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
பாமகவின் உயிர்முச்சு கொள்கை பூரண மதுவிலக்கு, அதற்காக தொடர்ந்து பாடுபடுவோம். மதிமுக தேர்தல் புறக்கணிப்பு முடிவு குறித்து நான் கருத்து எதுவும் சொல்ல முடியாது. உயர்கல்விக்கு நுழைவுத் தேர்வை கொண்டு வந்தால் அதனை கடுமையாக எதிர்த்து போராடுவோம். தொழில் தொடங்க பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்ற நிலையில் ஏழைகளுக்கு இலவசங்கள் வழங்குவதில் எந்த தவறும் இல்லை. அது வறுமையை ஒழிக்க ஓரளவுக்கு உதவும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக