திமுக அரசு அமையும் பட்சத்தில் அதற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் என்று உறுதியளித்துள்ளோம் என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
பாமக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை அடுத்து அமைய உள்ள திமுக அரசு செயல்படுத்த வலியுறுத்துவோம். திமுக அரசு அமையும் பட்சத்தில் அதற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் என்று உறுதியளித்துள்ளோம். எனவே குறைந்தபட்ச செயல் திட்டம் எதையும் வலியுறத்த மாட்டோம். கூட்டணி ஆட்சியில்தான் குறைந்த பட்ச செயல் திட்டத்தை வலியுறத்த முடியும். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் துணை நகரம் அமைப்பதில் பாமகவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக