விழுப்புரம் மாவட்டத்தில் பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம்

ரிஷிவந்தியம்:
 
           தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்னைகளுக்காக பாளையங்கோட்டையை தவிர, அனைத்து சிறைகளுக்கும் சென்றுள்ளேன்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். 

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதி காங்.,வேட்பாளரை ஆதரித்து பகண்டை கூட்ரோட்டில், நேற்று முன்தினம் இரவு நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது:

                   ஜெ.,யாரையும் மதிக்காதவர். கருணாநிதி சிறந்த சிந்தனையாளர். இங்கு நிற்கும் வேட்பாளரின் கட்சிக்கு என்ன கொள்கை உள்ளது. என்னை போராளி என, கூறுகிறார். தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்னைகளுக்காக பாளையங்கோட்டையைத் தவிர அனைத்து சிறைகளுக்கும் சென்றுள்ளேன்.திருமண மண்டபம் இடித்ததாலும், படம் வெளியிட தியேட்டர் கிடைக்காததாலும் ஒருவர் போராட்டம் நடத்தியுள்ளார். 

              "இளைஞர்கள் புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது' என்பதற்காக சினிமாக்களில் அந்த காட்சிகளுக்கு தடை கொண்டு வர செய்தோம். தள்ளாடும் நபரையா ஆதரிக்கப் போகிறீர்கள்.இளைஞர்கள் சிலர் அவருக்கு பின்னால் உள்ளனர். பெரியவர்கள் தான் இளைஞர்களை மாற்ற வேண்டும். விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டால் அவர்கள் என்ன செய்வார்களோ என்ற அச்சத்தில் இங்கு வந்துள்ளார். அவரை ஜெயிக்க விடக் கூடாது.ஓட்டு போடாவிட்டால் நடிக்கச் சென்று விடுவேன் என கூறுகிறார். 

               காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜிற்கு ஓட்டு போடா விட்டாலும் இங்கு தான் இருப்பார். இந்த மண்ணின் மைந்தர். அவருக்கு சொந்த ஊர் மதுரை. அங்கு சென்று தேர்தலில் நிற்க வேண்டியது தானே. உங்கள் வீட்டு இளைஞர்களை தட்டிக் கொடுத்து, அவர் பின்னால் சென்று தள்ளாடாமல் இருக்க திசை திருப்புங்கள். சிவராஜிற்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

           விழுப்புரம் மாவட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று இரவு, ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

இதில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது:
                    
          பொன்முடி ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். தேர்தல் அன்று சிறுத்தைகள், பாட்டாளி தொண்டர்கள் 100 பேர் ஓட்டுச்சாவடி முன் நின்றாலே போதும், மற்ற கட்சியினர் உள்ளே வராமல் திரும்பிவிடுவர். நமக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக நினைத்து ஒதுங்கிவிடாமல், மீதமுள்ள 12 நாட்களிலும் 12 முறை மக்களைப் பார்த்து ஓட்டு சேகரிக்க வேண்டும். தொகுதியில் உள்ள 2 லட்சத்து 4 ஆயிரம் பேரையும் நாம் திரும்பத் திரும்ப போய் பார்த்தால் தான் வெற்றி பெற முடியும்.இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

0 கருத்துகள்: