சிதம்பரம்:
பா.ம.க. தலைவர் ராமதாசை விமர்சனம் செய்து பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்தைக் கண்டித்து அவரது உருவ பொம்மையை சிதம்பரம் காந்திசிலை அருகே செவ்வாய்க்கிழமை வன்னியர் சங்கத்தினர் எரித்தனர். வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், நகரத் தலைவர் க.ரஜினிகாந்த், நகரச் செயலர் இரா.குமார், வன்னியர் சங்க இளைஞர் படை தளபதி வ.கணேசன், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலர் இரா.செந்தில், மாவட்ட வன்னியர் சங்க துணைச் செயலர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக