திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் பால்பாஸ்கர் தீவிர ஓட்டுவேட்டை

திண்டுக்கல்:

                திண்டுக்கல் தொகுதியில் பா.ம.க. சார்பில் பால்பாஸ்கர் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர ஓட்டுவேட்டை நடத்தி வருகிறார். நேற்று அவர் திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியில் பிரசாரத்தை தொடங்கினார். பெரியார்நகர், மடத்துதெரு, மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி, சோழராஜா காலனி, குரும்பபட்டி, பாலக்கோட்டை, சென்னமநாயக்கன்பட்டி, அழகர்சிங்கம்பட்டி, இந்திரா நகர், சரளப்பட்டி, காந்தி நகர்காலனி ஆகிய பகுதிகளில் தீவிர ஓட்டு வேட்டை நடத்தினார்.  

                 பிரசாரத்தின் போது திண்டுக்கல் பகுதியில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்பேன். சாலை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுப்பேன் என்றார். வேட்பாளருடன் திண்டுக்கல் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப.பெருமாள்சாமி, மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

0 கருத்துகள்: