திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் பால்பாஸ்கர் தீவிர ஓட்டுவேட்டை

திண்டுக்கல்:

                திண்டுக்கல் தொகுதியில் பா.ம.க. சார்பில் பால்பாஸ்கர் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர ஓட்டுவேட்டை நடத்தி வருகிறார். நேற்று அவர் திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியில் பிரசாரத்தை தொடங்கினார். பெரியார்நகர், மடத்துதெரு, மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி, சோழராஜா காலனி, குரும்பபட்டி, பாலக்கோட்டை, சென்னமநாயக்கன்பட்டி, அழகர்சிங்கம்பட்டி, இந்திரா நகர், சரளப்பட்டி, காந்தி நகர்காலனி ஆகிய பகுதிகளில் தீவிர ஓட்டு வேட்டை நடத்தினார்.  

                 பிரசாரத்தின் போது திண்டுக்கல் பகுதியில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்பேன். சாலை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுப்பேன் என்றார். வேட்பாளருடன் திண்டுக்கல் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப.பெருமாள்சாமி, மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ம.க. தேர்தல் பணிக்குழு நியமனம்

திண்டுக்கல்:
 
              திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள திண்டுக்கல், நத்தம், வேட சந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் பணிக்குழுவை நியமனம் செய்துள்ளது. 
 
                இப்பணிக்குழுவின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கோபால கிருஷ்ணன், ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புச்செயலாளர் வெள்ளைக்கோபால், மாவட்ட செயலாளர் பரசுராமன், மாவட்டத்தலைவர் டோமினிக் செல்வராஜ், மாவட்டப்பொருளாளர் நாகரத்தினம், மாவட்டச்செயலாளர் ஜெய்லானி, மாநில மகளிர் சங்க துணைச்செயலாளர் பார்வதி ராசா, மாநில இளைஞர் அணி செயலாளர் ராமகிருஷ்ணன், நகர செயலாளர் சண்முகம், நகரத்தலைவர் யூசுப் அன்சாரி, மாவட்ட தொண்டரணித்தலைவர் சிவ.முருகன், நகர துணைச்செயலாளர் ரகுமான், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியதாஸ், திண்டுக்கல் ஒன்றிய தலைவர் இருளப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் காந்தி, நகரத் துணைத் தலைவர் தர்மர், நகர அமைப்புச்செயலாளளர் கனகராஜ், நகர தொண்டரணி செயலாளர் வடிவேல் முருகன் ஆகி யோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

நத்தம் சட்டமன்ற தொகுதி:
 
               நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு மாவட்ட செயலாளர் பரசுராமன், மாவட்ட தலைவர் டோம்னிக் செல்வராஜ், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி, மாவட்ட துணைத் தலைவர் சீரங்கன், நத்தம் ஒன்றிய செயலாளர் பொ.செல்வம், நத்தம் பேரூராட்சி செய லாளர் அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் அப்துல் அகமது ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  
 வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி

                 வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு மாவட்டத் தலைவர் டோம்னிக் செல்வராஜ், வடமதுரை ஒன்றிய செயலாளர் குமார், வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் விசுவாசம், குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் குமார், ஒன்றிய துணைச் செயலாளர் சக்திவேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் பால்.பாஸ்கர் வேட்பு மனு தாக்கல்

திண்டுக்கல்:
 
              தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் பால்.பாஸ்கர் போட்டியிடுகிறார். இவர் நேற்று தேர்தல் அதிகாரியும், ஆர்.டி.ஓ.வுமான பெருமாளிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
 
பின்னர் பா.ம.க. வேட்பாளர்  பால்.பாஸ்கர் கூறியது:-

               தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற பலம் வாய்ந்த கட்சிகள் உள்ளன. எனவே தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதியாகி விட்டது.   தி.மு.க. தேர்தல் அறிக்கை பொதுமக்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. எனவே தி.மு.க. கூட்ட ணியை பொதுமக்கள் ஆதரிப்பார்கள். வருகிற தேர்தலில் நான் வெற்றி பெற்றால் திண்டுக்கல் தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்ற பாடுபடுவேன் என்று கூறினார். அப்போது அவருடன் ஆத்தூர் தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான ஐ.பெரியசாமி, தி.மு.க. நகர செயலாளர் பஷீர்அகமது, ஒன்றிய செயலாளர் பெருமாள்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.