தேர்தல் பணிக்குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் பணிக்குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உள்ளாட்சித் தேர்தல்: கடலூர் மாவட்ட பா.ம.க.பணிக்குழு நியமனம்

கடலூர்:

           கடலூர் மாவட்ட பா.ம.க., வில் உள்ளாட்சித் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என மாநில இணை பொதுச் செயலாளர்  வேல்முருகன் கூறியுள்ளார்.

மாநில இணை பொதுச் செயலாளர்  வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

           கடலூர் மாவட்ட பா.ம.க., வில் உள்ளாட்சித் தேர்தல் பணிக் குழுக்கள் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலுடன், மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் கோவிந்தசாமி, மாநில துணை பொதுச் செயலர் சண்முகம் ஆகியோர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி

கடலூர், பண்ருட்டி:

           கடலூர், பண்ருட்டிக்கு மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, அலுவலக செயலர் ராமச்சந்திரன், தலைவர் கோதண்டபாணியும், 


நெய்வேலி, குறிஞ்சிப்பாடி:

      
நெய்வேலி, குறிஞ்சிப்பாடிக்கு மாநில துணைத் தலைவர் திருமால்வளவன், மாவட்டச் செயலர் தர்மலிங்கம், நிர்வாகக்குழு உறுப்பினர் முத்து வைத்திலிங்கம், தலைவர் சக்திவேல், அமைப்புச் செயலர் ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி:

              புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடிக்கு மாநில தேர்தல் பணிக்குழு தனபால், மாவட்டச் செயலர் சின்னதுரை, முன்னாள் மாநில துணை பொதுச் செயலர் திருஞானம், முன்னாள் மாவட்டச் செயலர் செல்வராசு, மாவட்டத் தலைவர் ஆடியபாதம், சிதம்பரம், 

காட்டுமன்னார்கோவில் :

          காட்டுமன்னார்கோவிலுக்கு மாநில துணைத் தலைவர் சவுந்திரபாண்டியன், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு தேவதாஸ் படையாண்டவர், மாவட்டச் செயலர் வேணு புவனேஸ்வரன், முன்னாள் மாவட்டச் செயலர் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம்

நாகை:

            தமிழக சட்டபேரவை தேர்தலில் தலைமை தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்படுகிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாகை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். 

முன்னதாக வேளாங்கண்ணியில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

               தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தலைமை தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. தேர்தல் பணியில் மாவட்ட கலெக்டர்கள், உதவி கலெக்டர்கள், தாசில்தார்களை மாநில அரசுடன் கலந்து பேசி நியமனம் செய்ய வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சொல்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் மாவட்ட கலெக்டர்களையும், காவல்துறை அதிகாரிகளையும் இடம் மாற்றம் செய்கிறது. 

             அதோடு அவர்களை விடுமுறையில் செல்லலாம் என்றும் ஆணையிடுகிறது. மாநில அரசோடு கலந்து பேச வேண்டாமா? என்றால் தேவையில்லை என்கிறார் தேர்தல் ஆணையர் குரேஷி. தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரை தலைமை தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை. இன்னொரு எதிர்க்கட்சி போல் செயல்படுகிறது. சோதனை என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். ரூ.20 கோடி, ரூ.30 கோடி பிடிபட்டுள்ளது என்கின்றனர். வெள்ளி, தங்கம், பாத்திரங்கள் பிடிப்பட்டதாக சொல்கிறார்கள். தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து சோதனை செய்கிறார்கள்.

                ஆனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க. அதிக அளவில் பணத்தை செலவிட திட்டமிட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு ஏற்கனவே ரூ.5 கோடி வழங்கப்பட்டு விட்டதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் உற்சாகமாக பேசப்படுகிறது. இதனை மத்திய புலனாய்வு துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் அ.தி.மு.க. வேட்பாளர்கள், நிர்வாகிகள் வீட்டில் சோதனை போட வேண்டும் என்ற எண்ணம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. தேர்தல் ஆணையத்தால் அனுப்பிவைக்கப்பட்ட அதிகாரிகளுக்கு கூட இல்லை. குதிரைக்கு கண்ணை மூடி கடிவாளம் போட்டது போல தேர்தல் ஆணையம் கண்ணைக் கட்டிக்கொண்டு சோதனை நடத்தி வருகின்றது.

                 அதாவது தி.மு.க. கூட்டணிக்கு எதிராகவும், அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாகவும் செயல்படுகிறது. அ.தி.மு.க. பக்கம் திரும்பி பார்க்க முடியவில்லை என்பதை விட அந்த பக்கமே திரும்பவில்லை என்பதுதான் உண்மை. தேர்தல் ஆணையத்தின் நடுநிலையற்ற இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக சோதனை செய்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் தேர்தல் ஆணையம் சார்பில் வாதாடும் வக்கீல் ராஜகோபால் ஜெயலலிதாவிற்காக பல வழக்குகளில் ஆஜராகி வாதாடியவர் என்பது தெரியவருகிறது.

                   மாநில டி.ஜி.பி. லத்திகா சரண், மாநில உளவுத்துறை தலைவர் மற்றும் சில அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வார்கள் என கருதி இடம் மாற்றம் செய்த தேர்தல் ஆணையம் தனது சார்பில் மேற்கண்ட வழக்கில் வாதாட அ.தி.மு.க. தலைவருக்காக வாதாடிய வக்கீலை நியமித்தது எப்படி? இது எந்த வகையில் நடுநிலை ஆகும். இதனை தேர்தல் ஆணையம் தான் விளக்க வேண்டும்.

                பாரபட்சமின்றி நடக்கிறோம் என்று சொன்னால் மட்டும் போதாது. அதனை நம்பும்படியாக காரியங்களை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும். இதுவரை நடந்த காரியங்களை பார்த்தால் தேர்தல் ஆணையம் ஒரு எதிர்க்கட்சி அணி அல்லது அங்கு இணைந்த அங்கம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் எந்த மருத்துவமனைக்கு செல்கிறோம். நோயாளி யார் என்று தேர்தல் அதிகாரியிடம் கூறிவிட்டு செல்ல வேண்டும் என்பதுதான்.

                       தேர்தல் ஆணையத்தின் இந்த களங்கம் என்றும் நீங்காது. குரேஷி இதில் சரித்திரம் படைத்து விட்டார். தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமையற்ற போக்கு என்று பிற்காலத்தில் உதாரணம் காட்ட வேண்டும் என்றால் இந்த சட்டபேரவை தேர்தலில் குரேஷி தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நிச்சயம் எடுத்துக்காட்டப்படும் என்றார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ம.க. தேர்தல் பணிக்குழு நியமனம்

திண்டுக்கல்:
 
              திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள திண்டுக்கல், நத்தம், வேட சந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் பணிக்குழுவை நியமனம் செய்துள்ளது. 
 
                இப்பணிக்குழுவின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கோபால கிருஷ்ணன், ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புச்செயலாளர் வெள்ளைக்கோபால், மாவட்ட செயலாளர் பரசுராமன், மாவட்டத்தலைவர் டோமினிக் செல்வராஜ், மாவட்டப்பொருளாளர் நாகரத்தினம், மாவட்டச்செயலாளர் ஜெய்லானி, மாநில மகளிர் சங்க துணைச்செயலாளர் பார்வதி ராசா, மாநில இளைஞர் அணி செயலாளர் ராமகிருஷ்ணன், நகர செயலாளர் சண்முகம், நகரத்தலைவர் யூசுப் அன்சாரி, மாவட்ட தொண்டரணித்தலைவர் சிவ.முருகன், நகர துணைச்செயலாளர் ரகுமான், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியதாஸ், திண்டுக்கல் ஒன்றிய தலைவர் இருளப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் காந்தி, நகரத் துணைத் தலைவர் தர்மர், நகர அமைப்புச்செயலாளளர் கனகராஜ், நகர தொண்டரணி செயலாளர் வடிவேல் முருகன் ஆகி யோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

நத்தம் சட்டமன்ற தொகுதி:
 
               நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு மாவட்ட செயலாளர் பரசுராமன், மாவட்ட தலைவர் டோம்னிக் செல்வராஜ், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி, மாவட்ட துணைத் தலைவர் சீரங்கன், நத்தம் ஒன்றிய செயலாளர் பொ.செல்வம், நத்தம் பேரூராட்சி செய லாளர் அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் அப்துல் அகமது ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  
 வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி

                 வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு மாவட்டத் தலைவர் டோம்னிக் செல்வராஜ், வடமதுரை ஒன்றிய செயலாளர் குமார், வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் விசுவாசம், குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் குமார், ஒன்றிய துணைச் செயலாளர் சக்திவேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் (தெற்கு) மாவட்ட பாமக தேர்தல் பணிக் குழு தலைவர் நியமனம்

சிதம்பரம்:

          பாமக கடலூர் (தெற்கு) மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவராக சிதம்பரம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ப.மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்புதலின் பேரில் மாவட்டச் செயலாளர் வேணு.புவனேஸ்வரன் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.