திண்டுக்கல்:
தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் பால்.பாஸ்கர் போட்டியிடுகிறார். இவர் நேற்று தேர்தல் அதிகாரியும், ஆர்.டி.ஓ.வுமான பெருமாளிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர் பா.ம.க. வேட்பாளர் பால்.பாஸ்கர் கூறியது:-
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற பலம் வாய்ந்த கட்சிகள் உள்ளன. எனவே தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதியாகி விட்டது. தி.மு.க. தேர்தல் அறிக்கை பொதுமக்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. எனவே தி.மு.க. கூட்ட ணியை பொதுமக்கள் ஆதரிப்பார்கள். வருகிற தேர்தலில் நான் வெற்றி பெற்றால் திண்டுக்கல் தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்ற பாடுபடுவேன் என்று கூறினார். அப்போது அவருடன் ஆத்தூர் தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான ஐ.பெரியசாமி, தி.மு.க. நகர செயலாளர் பஷீர்அகமது, ஒன்றிய செயலாளர் பெருமாள்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக