பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையானது, தேர்தல் கதாநாயகி; வெற்றித் திருமகள். 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்று போட்டியிட்டது. அப்போது, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய், இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, 7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி என்று அனைத்தும் நிறைவேற்றப்பட்டுவிட்டன.
அந்த தேர்தல் அறிக்கை வெளிவந்த நேரத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து, வெற்றியும் கிட்டியது. தேர்தல் கதாநாயகன் என்று அப்போது பாராட்டப்பட்டது. இப்போது வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையை முதல்- அமைச்சர் கருணாநிதி கதாநாயகி என்று கூறியுள்ளார்.
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.2 லட்சம் மானியத்துடன் ரூ.4 லட்சம் கடன், இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ இலவச அரிசி, 60 வயதிற்கு மேலானவர்களுக்கு இலவச பஸ் பாஸ், கல்விக்கடனை அரசே ஏற்றுக்கொள்ளும் என ஏராளமான அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் வெளியாகியுள்ளன.
இதை பார்த்த உடனேயே மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அறிவித்த அனைத்தையும் நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீடுவழங்கும் திட்டம் என கூடுதல் திட்டங்களை நிறைவேற்றியதால், இந்த தேர்தல் அறிக்கையில் கூறியதையும் அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டு, அவை அனைத்தும் ஓட்டாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையின் மூலம் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, முதல்- அமைச்சர் கருணாநிதி 6-வது முறையாக முதல்-அமைச்சராவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக