திண்டிவனம்:
மயிலம் சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் பிரகாஷுக்கு கூட்டேரிப்பட்டு கூட்டுரோடு சந்திப்பில் புதன்கிழமை மாலை கூட்டணி கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொகுதி மறு சீரப்பில் திண்டிவனம் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு மயிலம் பொதுத் தொகுதியாக உருவாகி உள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளராக நாகராஜ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் பாமகவுக்கு மயிலம் தொகுதி ஒதுக்கப்பட்டது.
செஞ்சி வட்டம் கீழ்மாம்பட்டை சேர்ந்த இ.ரா.பிரகாஷ் என்பவர் மயிலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கூட்டணிக் கட்சியினரை சந்தித்து ஆதரவு கேட்க வந்த மயிலம் பாமக வேட்பாளர் பிரகாஷுக்கு திமுக காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாமக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பின் போது பாமக சார்பில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் வசந்திராதேவி, ஒன்றியக் கவுன்சிலர் நெடிசுப்பிரணி, மாநில செயற்குழு உறுப்பினர் அரிகிருஷ்ணன், திமுக சார்பில் மாவட்ட பிரதிநிதி ஜோதி, முன்னாள் ஒன்றியச் செயலர் பெருமாள், காங்கிரஸ் ள்கட்சி சார்பில் மயிலம் வட்டாரத் தலைவர் லட்சுமணன், டிஎஸ்சி குழு உறுப்பினர் இல.கண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட துணைச் செயலர் பாரதிதாசன், மயிலம் ஒன்றியச் செயலர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதனை தொடர்ந்து மயிலம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார் வேட்பாளர் பிரகாஷ்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக