வாடிப்பட்டி:
சோழவந்தான் பா.ம.க., வேட்பாளர் இளஞ்செழியனை ஆதரித்து வாடிப்பட்டியில் பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க.,மாவட்டச் செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட காங்.,தலைவர் செல்வராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
அப்போது பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் பேசியது:
"கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்' என திருவாரூர் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசினார். நன்றிக் கடனாக நாங்கள், வட மாவடங்களில் கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம். ஜெயலலிதா, "வரும் காலங்களில் மக்கள் கையேந்தும் நிலை மாறும்' என குறிப்பிட்டுவிட்டு, தேர்தல் அறிக்கையையை வெளியிட்டுள்ளார்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு நான்கு ஆடு, ஒரு பசுமாடு வழங்கப்படும் என்கிறார். 30 லட்சம் பேருக்கு ஒரு கோடி 70 லட்சம் ஆடுகளை எப்படி உற்பத்தி செய்ய முடியும்? நடைமுறை சாத்தியம் இல்லாதது. இத்தேர்தலுடன் ஜெ., அரசியல் வரலாறு முடிவுக்கு வரும். என்றார். பா.ம.க., மாவட்டச் செயலாளர் கிட்டு, தி.மு.க.,ஒன்றிய செயலாளர் பாலராஜேந்திரன், நகர் செயலாளர் பால்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் அயூப்கான் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக