மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் ஜி.கே. மணி வாக்கு சேகரிப்பு

மேட்டூர்:

          மேட்டூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜி.கே. மணி நேற்று காலை கொளத்தூரில் நடைபெற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது ஜி.கே. மணி
பேசியது:-

                கடந்த 5 ஆண்டுகளில் மேட்டூர் தொகுதிக்கு அரசு கலைக்கல்லூரி, மேட்டூருக்கு மீண்டும் பயணிகள் ரெயில் போக்குவரத்து, மேட்டூர் புதிய அனல் மின் நிலையம், போன்ற பல நல்ல திட்டங்களை டாக்டர் கலைஞர் அரசின் உதவியுடன் நிறைவேற்றி உள்ளேன். மேலும் மேட்டூர் நகராட்சியில் பாதாள சாக்கடை, மேட்டூர் நகராட்சிக்கு 24 மணி நேரமும் தடையில்லா காவிரி குடிநீர் கிடைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

                எனக்கு வாக்களித்து மீண்டும் மேட்டூர் தொகுதி மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பினை வழங்கினால் இந்த தொகுதிக்கு மேலும் பல நல திட்டங்களை செயல்படுத்துவேன் என்று பேசினார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து அவர் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கண்ணாம்மூச்சி, சவேரியார்பாளையம், பூமனூர், உள்பட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று ஓட்டு சேகரித்தார்.

0 கருத்துகள்: