பர்கூர் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிமுக கூட்டம்

கிருஷ்ணகிரி:
              கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் பா.ம..க. வேட்பாளர் டி.கே. ராஜா அறிமுக கூட்டம் பர்கூர் தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டியில் நடைபெற்றது. காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.


              இக்கூட்டத்தில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன், முன்னாள்எம்.பி. வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் நாகராஜ், பா.ம க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


                 பர்கூர் ஒன்றியம் மற்றும் நகரசம்பட்டி பேரூராட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் 2 தொகுதியை சேர்ந்த 1000- க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர்கள் தி.மு.கவின் 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை குறித்து பேசினார்கள். மீண்டும் இலவசங்கள் தொடர 6-வது முறையாக கலைஞரை மீண்டும் முதல்வராக ஆக்குவது என்று பேசினார்கள்.


                இதற்காக கடுமையாக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. வாக்காளர்கள் ஒவ் வெருவரையும் சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரிக்கவேண்டும். மேலும் பா.ம.க. வேட்பாளர் ராஜாவை பல்லயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசினார்கள்.

0 கருத்துகள்: