பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் அகோரம் தீவிர வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை:
               பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் அகோரம் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 
 
               பூம்புகார் சட்டமன்றத்தொகுதி தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பா.ம.க. சார்பில் அகோரம் போட்டியிடுகிறார். தி.மு,க., காங்கிரஸ், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், விடுதலைச்சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளைச்சேர்ந்த பொறுப்பாளர்கள் பா.ம.க.வேட்பாளர் அகோரத்தை ஆதரித்து மாங்கனி சின்னத்திற்கு வாக்கு கேட்டு வருகிறார்கள்.

                 இதனைத் தொடர்ந்து கீழையூர், மேலையூர், கஞ்சாநக ரம்,கிடாரம்கொண்டான், கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளம் உட்பட 10 கிராமங்களில் தி.மு,க. ஆட்சி தமிழ்நாட்டில் மீண்டும் வர மாங்கனி சின்னத்திற்கு வாக்கு கேட்டார்கள். ஏழைகளின் நல்வாழ்விற்காக நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்திய தி.மு.க.ஆட்சி தமிழ்நாட்டில் தொடர்ந்து இருந்தால்தான் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழமுடியும்.

               குழந்தைகள், ஏழைகள், மாணவர்கள், பெண்கள், முதியோர்கள் என்று வித்தியாசம் பார்க்காமல் அனைத்துப் பிரிவு மக்களும் மனநிறைவுடன் வாழ்வதற்கு அவ்வப்போது தேவையான திட்டங்களை செயல்படுத்தும் ஒரே முதலமைச்சர் கலைஞர். தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர பா.ம.க.வை ஆதரித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.  
 
                வேட்பாளருடன் பூம்புகார் சட்டமன்ற தேர்தல்பணிக்குழு தலைவரும் தி.மு.க.ஒன்றிய செயலாளருமான மு.ஞானவேலன், மாநில வன்னியர் சங்க துணை செயலாளர் மூர்த்தி, தி.மு.க.மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணையன், பா.ம.க.ஒன்றிய செயலாளர் மணிசெல்வம், மாவட்ட தி.மு.க.பிரதிநிதி க.கருணாநிதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கே.எஸ்.எஸ்.கருணாநிதி மற்றும் விடுதலைச்சிறுத்தை மற்றும் ஜனநாயக முற்போக்கு கட்சியின் பொறுப்பாளர் பலர் உடன் சென்றனர்.

0 கருத்துகள்: