சென்னை:
பல்லாவரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தா.மோ. அன்பரசனை ஆதரித்து குரோம்பேட்டை ஆஸ்தினாபுரம், கீழ்க்கட்டளை பகுதிகளில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:-
பல்லாவரம் தொகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்கு, பஸ்நிலையம் உள்பட பல்வேறு பணிகளை தா.மோ.அன்பரசன் செய்து முடித்துள்ளார். தி.மு.க. அரசின் 5 ஆண்டு சாதனைகளையும், செய்யப்போகிற சாதனைகளையும், சொல்லி வாக்கு சேகரியுங்கள்.
ஜெயலலிதாவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. கருத்து கணிப்பு என்று சிலர் கருத்து திணிப்பு நடத்துகின்றனர். இதையெல்லாம் நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள். தி.மு.க. அரசின் நலத் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் தமிழகத்தில் பயன் அடைந்துள்ளனர். எனவே களப்பணியாளர்கள் ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்தித்து தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
இதில் ஏ.கே.மூர்த்தி, பல்லாவரம் நகர தி.மு.க. செயலாளர் இ.கருணாநிதி உள்பட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக