சிதம்பரம்:
புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளர் த.அறிவுச்செல்வனை ஆதரித்து வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தனர்.
முன்னாள் மாநில நிர்வாகி இமயவரம்பன், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் செந்தில்முருகன் ஆகியோர் தலைமையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் கீரப்பாளையம் ஒன்றியத்தில் சாக்காங்குடி, ஆயிப்பேட்டை, அள்ளூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் த.அறிவுச்செல்வனுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்குச் சேகரித்தனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக தலைமைக்கழக பேச்சாளர் கீரை.வீரமணி, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தேவதாஸ் படையாண்டவர், வன்னியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜம்புலிங்கம் உள்ளிட்டோர் பஙகேற்றனர். இதேபோல் புவனகிரி, கீரப்பாளையம் பகுதிகளில் பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் குருதேவ், காசிநாதன், வேல்முருகன், சரவணன் உள்ளிட்டோர் பாமக வேட்பாளருக்கு வாக்குச் சேகரித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக