பாட்டாளி தொழிற்சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாட்டாளி தொழிற்சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புவனகிரி சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து வன்னியர் சங்கம் பிரசாரம்

சிதம்பரம்:

             புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளர் த.அறிவுச்செல்வனை ஆதரித்து வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தனர்.

               முன்னாள் மாநில நிர்வாகி இமயவரம்பன், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் செந்தில்முருகன் ஆகியோர் தலைமையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் கீரப்பாளையம் ஒன்றியத்தில் சாக்காங்குடி, ஆயிப்பேட்டை, அள்ளூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் த.அறிவுச்செல்வனுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்குச் சேகரித்தனர்.

              இந்நிகழ்ச்சியில் திமுக தலைமைக்கழக பேச்சாளர் கீரை.வீரமணி, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தேவதாஸ் படையாண்டவர், வன்னியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜம்புலிங்கம் உள்ளிட்டோர் பஙகேற்றனர். இதேபோல் புவனகிரி, கீரப்பாளையம் பகுதிகளில் பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் குருதேவ், காசிநாதன், வேல்முருகன், சரவணன் உள்ளிட்டோர் பாமக வேட்பாளருக்கு வாக்குச் சேகரித்தனர்.

நெய்வேலியில் அரசு மருத்துவ கல்லூரி அமைய பாடுபடுவேன்: பா.ம.க. வேட்பாளர் வேல்முருகன்

நெய்வேலி:

               நெய்வேலியில் உள்ள பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் தொழிற் சங்கம் மற்றும் பா.ம.க. கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் திலகர் வரவேற்றார். தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார்.  
கூட்டத்தில் நெய்வேலி தொகுதி பா.ம.க. வேட்பாளர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசியது:-

                  நெய்வேலியில் அமைந்துள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் பாட்டாளி தொழிற் சங்கம் ஆகியவைகள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக உள்ளன. இந்த தொழிற் சங்கங்களின் உறுப்பினர்கள் முனைப்புடன் கூட்டணி கட்சியினருடன் ஒற்றுமையுடன் செயல்பட்டு தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். நெய்வேலியில் தொழி லாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக களமிறங்கி போராடி வெற்றி பெற்றுள்ளேன்.

               பா.ம.க. கூட்டணி வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். முன்னாள் மத்திய மந்திரி அன்புமணியின் கனவை நனவாக்கும் வகையில் நெய்வேலியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க பாடுபடுவேன். 21, 30 ஆகிய வட்டங்களில் குடியிருக்கும் குடிசை வாழ் மக்களின் அடிப்படை பிரச்சினையான குடிநீர் மற்றும் மின்சாரம் பெற்றுத்தர முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் பலமுறை பேசியுள்ளேன். அவரும் கலெக்டர் மற்றும் என்.எல்.சி. நிறுவன தலைவரிடம் பேசியுள்ளார். இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

               கூட்டத்தில் நெய்வேலி நகர செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகள் ஜோதி பிரகாசம், வளர்மதி, பாட்டாளி தொழிற்சங்க பொருளாளர் மோனிகா, அலுவலக செயலாளர் சுப்பிரமணியன், வன்னியர் சங்க முன்னாள் செயலாளர் ஜோதிலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மது அருந்துவதை கைவிடுங்கள்: தொழிலாளர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

தருமபுரி:

             மது அருந்தும் பழக்கத்தை தொழிலாளர்கள் கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ச.ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.  

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக பாட்டாளி கட்டட தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ச.ராமதாஸ் பேசியது:  

               பாட்டாளிகள், தொழிலாளர்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி பாமக. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்ததும் பாமகதான்.  எவ்வளவு கூலி வாங்கினாலும் தொழிலாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. இதற்கு முக்கிய காரணம் மதுப்பழக்கம். 

               ஒரு கட்டட மேஸ்திரி தினமும் ரூ.400 ஊதியம் பெறுகிறார் என்றால் அதில் ரூ.300-க்கும் மேல் மதுவுக்காக செலவு செய்கிறார்.  இந்த பழக்கத்தில் இருந்து தொழிலாளிகள் விடுபட்டால்தான் வாழ்வில் முன்னேற முடியும். தன்னுடைய பிள்ளைகள் முன்னேற பெற்றோர்கள் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும். திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளில் இருந்து அதிக வருவாய் ஏற்படுத்ததான் முயற்சி எடுக்கிறது. அந்த பணத்தில் இருந்து தான் கலர் டிவி, ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டம் போன்றவற்றை மாநில அரசு நிறைவேற்றி வருகிறது.  

               புயல் காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது போல, மழை காலங்களில் கட்டடத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார் ராமதாஸ்.  

         இதில், பாமக தலைவர் ஜி.கே.மணி, சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.சம்பத், பொதுச்செயலர் பி.ரவி, பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை மாநில பொதுச்செயலர் அ.ஞானசேகரன், முன்னாள் எம்.பி. ரா.செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர். 

 தீர்மானங்கள்: 

                    கட்டுமானப் பொருள்களின் விலையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.  கேரளம், கர்நாடக மாநிலங்கள் போல கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட கடன் வழங்க வேண்டும். மாநில பட்ஜெட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கென தனி நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாட்டாளி தொழிற்சங்கத்துக்கு வாக்களிக்க ராமதாஸ் வேண்டுகோள்

               
           அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழிலாளர்களின்  பிரதிநிதித்துவம் பெற்ற தொழிற்சங்கத்தை தேர்வு செய்வதற்கான தேர்தலில், பாட்டாளி தொழிற்சங்கத்துக்கு வாக்களிக்குமாறு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
            நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மிகக் குறுகிய காலத்தில் நிர்வாகத்துடன் போராடி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தேர்தலில் பாட்டாளி தொழிற்சங்கத்துக்கு போக்குவரத்துத் தொழிலாளர்கள் வாக்களித்து, அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியராக்குவார் முதல்வர்: ராமதாஸ்

சென்னை:
              போக்குவரத்து தொழிலாளர்களை, முதல்வர் கருணாநிதி அரசு ஊழியராக்குவார் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  பாட்டாளி தொழிற்சங்கத்தின் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசியது:  
                               அரசு ஊழியர் என்பது ஒரு கெüரவம். அதற்காகவே, தங்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  எனவே, அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக ஆக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை.  நான் ஒரு போராளி என்பது அனைவருக்கும் தெரியும். 
                  எனவே, போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக ஆக்க நான் போராடத் தயங்க மாட்டேன். எனினும், முதல்வர் கருணாநிதி அத்தகைய சூழலை ஏற்படுத்த மாட்டார் என்று நான் நம்புகிறேன் என்றார் ராமதாஸ்.