போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியராக்குவார் முதல்வர்: ராமதாஸ்

சென்னை:
              போக்குவரத்து தொழிலாளர்களை, முதல்வர் கருணாநிதி அரசு ஊழியராக்குவார் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  பாட்டாளி தொழிற்சங்கத்தின் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசியது:  
                               அரசு ஊழியர் என்பது ஒரு கெüரவம். அதற்காகவே, தங்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  எனவே, அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக ஆக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை.  நான் ஒரு போராளி என்பது அனைவருக்கும் தெரியும். 
                  எனவே, போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக ஆக்க நான் போராடத் தயங்க மாட்டேன். எனினும், முதல்வர் கருணாநிதி அத்தகைய சூழலை ஏற்படுத்த மாட்டார் என்று நான் நம்புகிறேன் என்றார் ராமதாஸ்.

0 கருத்துகள்: