மதுக்கடைகளை மூட ராமதாஸ் கோரிக்கை

                    தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிக்கை காலங்களில் மதுக்கடைகளை மூட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

                     சுற்றுச் சூழலை பாதிக்கக் கூடிய ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சன்கோவில், பம்பை, வைப்பாறு ஆகிய ஆறுகளின் இணைப்பு திட்டம் பல ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்.

                   தீபாவளி திருநாள், புத்தாண்டு கொண்டாட்டம், பொங்கல் திருநாள் போன்ற பண்டிக்கை காலங்களில் மது விற்பனையை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது அரசின் டாஸ்மாக் மூலம் 3 நாட்களில் 300 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இது வருத்தம் அளிக்கிறது. அரசே இதுபோன்ற நிலையை ஏற்படுத்தினால் குடி பெருமாகாமல் இருக்குமா?

                    இதுபோன்ற பண்டிகை நாட்களில் மதுக்கடைகளை அரசு மூட வேண்டும் என்று தமிழக அரசிடம்  நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். தீபாவளி திருநாள், புத்தாண்டு கொண்டாட்டம், பொங்கல் திருநாள் போன்ற பண்டிக்கை காலங்களில் அரசின் டாஸ்மாக் கடைகளை 3 நாட்களுக்கு மூட வேண்டும்.

                      கத்தார் நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள குமரி மாவட்ட மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றார்.

0 கருத்துகள்: