கோவில்பட்டி:
கோவில்பட்டியில் மதிமுகவினரைச் சந்தித்து பாமக வேட்பாளர் ஆதரவு கேட்டார்.
கோவில்பட்டியில் மதிமுக சார்பில் "இன்றைய சூழலில் தமிழ்ச் சமுதாயம் ஆளுமை பெற்றிருக்கிறதா, அடங்கியிருக்கிறதா' என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றம் நிறைவடைந்தவுடன் கோவில்பட்டி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கோ.ராமச்சந்திரன் அங்கு சென்று, மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். அதையடுத்து நாஞ்சில் சம்பத் கோவில்பட்டியில் மாம்பழம் தித்திக்கும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக