இலங்கை தமிழர் பிரச்சினை- தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்ப்பு

                இலங்கை தமிழர் பிரச்சினையில் அமைதி ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

                   இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள `திடீர்’ மோதலால் அங்கு பதட்டம் நிலவுகிறது. உயிருக்கு பயந்து ஏராளமான தமிழ் குடும்பங்கள் த-ழ்நாட்டுக்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இலங்கை பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்த தி.மு.க. தோழமை கட்சிகள் கூட்டம் சென்னை அண்ணாஅறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பொருளாளர் சுதர்சனம், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்னியிஸ்டு கட்சி சார்’ல் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், இந்திய  யூ னியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசை வலியுறுத்தி 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்த தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

                * இலங்கையில் நார்வே நாடு ஈடுபட்டு நடத்திய அமைதிப்பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்து அங்கே அந்த மக்களுக்கான வளர்ச்சிப்பணிகளில் இலங்கை அரசும், போராளிகளும் அக்கறை காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது நிறைவேறாமல் மீண்டும் இரு சாராரும் மோதிக்கொள்ளும் நிலையும் – அந்த நாட்டின் அப்பாவி மக்கள் கண்ணி வெடிகளாலும், விமானத்தாக்குதலாலும் கொல்லப்படும் சம்பவங்கள் நடக்கின்றன.

          அதன் விளைவாக தமிழ்நாட்டை நோக்கி அகதிகள் வந்து குவிவதும், இந்தியா இலங்கை இரண்டுக்கும் இடையே வாழ்கின்ற மக்களின் மனத்தைப் பெரிதும் பாதிக்கும் அளவுக்கு அமைந்துள்ளதையும், இந்தப் பிரச்சினை ஏற்கனவே விரும்பத்தகாத பல விபரீத வேதனையான நிகழ்வுகளுக்கு காரணமாக அமைந்தது. இதை ஆழமாக எண்ணிப்பார்த்து, இலங்கையில் அமைதிக்கு வழி காண இந்திய அரசு ஆவன செய்திட வேண்டும் என்று நாங்கள் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.

மீனவர்களுக்கு பாதுகாப்ப்பு 

               * தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகள் நிறுத்தப்படவும், அந்த மீனவர்களுக்கு உயிர், உடமை, உரிமை ஆகியவற்றுக்கு உத்திரவாதம் அளிக்கப்படவும் இந்திய, இலங்கை அரசுகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




0 கருத்துகள்: