வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு: விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி அறிவிப்பு

திண்டிவனம்:

            திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுமென திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டார்.  

விழுப்புரம் திமுக மாவட்ட செயலர் க.பொன்முடி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாமக சார்பில் திண்டிவனம், மயிலம்,செஞ்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மொ.ப.சங்கர், ரா.பிரகாஷ், அ.கணேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து முதல்வர் கருணாநிதி பேசியது:  

               பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் இரண்டும் ஆதிக்க சக்திகளை வீழ்த்தக் கூடிய வல்லமை வாய்ந்த சக்திகளாகும். அம்பேத்கருக்கும், எனக்கும் நேரடி தொடர்பு கிடையாது. ஆனால் அவரை மும்பையில் அண்ணா சந்தித்தது பற்றி என்னிடம் கூறியுள்ளார். 

            அதிலிருந்து அம்பேத்கர் மீது எனக்கு தனி மரியாதை.  வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 20 பேரின் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் கருணைத் தொகையை வழங்கி வருகிறேன். ராமதாஸின் இடஒதுக்கிடு கோரிக்கையை நான் கைவிட மாட்டேன் என்றார்.

2 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

மக்கள் மனசாட்சிபடியும், திமுக ஆட்சியின் ஒவ்வொரு மக்கள் நல திட்டங்களையும் எண்ணிப்பார்த்து வாக்கு அளித்தால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெரும். மக்கள் தங்கள் நன்றிக்கடனை வாக்குகளாக செலுத்தனும். நேற்று முளைத்த காளான் (நடிகர் கட்சி) , ஆலமரத்தை (பாமக) பார்த்து கொக்கரிக்கிறது. இதை 2.5 கோடி பாட்டாளி சொந்தங்கள் கிள்ளி எறியணும். டாக்டர் அய்யாவின் கரத்தை வலுபடுத்த வேண்டும். நடிகர் கட்சியில் உள்ளவர்கள் வெறும் சினிமா பித்து பிடித்தவர்களும், குடிகாரர்களும் தான். படித்தவர்கள், பண்பாளர்கள் இல்லை.

dakaraidakila சொன்னது…

'பம்பரம்' புகழ் நடிகருக்கு தமிழக பெண்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஏனென்றால் இவர் தொப்புளில் பம்பரம் விட்டவர். வேட்பாளரை அடித்தவர். மேலும் குடிப்பழக்கம் கூடாது என்று தமிழக மக்களுக்கோ, தனது கட்சியினருக்கோ இதுவரை சொன்னதில்லை. மக்கள் நலனுக்காகவும், பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்தவில்லை. விருதாச்சலத்தை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சொல்லி ஏமாற்றியவர். பெண்கள் முன்னேற்றத்திற்காக எதையும் செய்யவில்லை.