திண்டிவனம்:
திண்டிவனம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் சங்கர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் பொன்முடி ஓட்டு சேகரித்தார். திண்டிவனத்தில் செஞ்சி பஸ் நிறுத்தம், காந்தி சிலை, ஆர்.எஸ்.பிள்ளைவீதி, திண்டிவனம் மேம்பாலம் ஆகிய பகுதியில் ஓட்டு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் பொன்முடி கூறியது:-
கலைஞர் ஆட்சியில் சொன்னதை செய்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை செய்துள்ளார். எனவே தற்போது கூறியுள்ள தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். மனசாட்சி உள்ள எவரும் தி.மு.க. கூட்டணிக்கே வாக்களிப்பார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.வின் சலுகை திட்டங்களை நிறுத்தி விடுவார்கள். எனவே பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஓட்டு வேட்டையின் போது திண்டிவனம் தி.மு.க. நகர செயலாளர் கபிலன், முன்னாள் எம்.எல்.ஏ. சேதுநாதன், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் அசோகன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராமன், நகரமன்ற தலைவர் பூபாலன், நகரமன்ற துணை தலைவர் கவிதா முரளிதரன், கவுன்சிலர்கள் முருகன், ஏழுமலை, பா.ம.க. மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாநில துணை தலைவர் கருணாநிதி, நகர செயலாளர் மலர் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்புராயலு, கவுன்சிலர்கள் வடபழனி, ஜெயராஜ், முரளிதாஸ், ராமன், காங்கிரஸ் நகர தலைவர் விநாயகம், புலிமணி, தரண், தனபால், விடுதலை சிறுத்தை கட்சி நகர அமைப்பாளர் திலீபன், மாநில அமைப்பாளர் ரமேஸ்நாதன், நகர செயலாளர் பூபால், இளஞ்சேரன், இளம்செல்வன், திருமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக