புவனகிரி சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் த.அறிவுசெல்வன் வாடகை வீட்டுக்கு மாறினார்

சிதம்பரம்:

               புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் த.அறிவுசெல்வன் தொகுதிக்குட்பட்ட சேத்தியாத்தோப்பு சென்னிநத்தம் கிராமத்தில் புதன்கிழமை வாடகை வீட்டில் பால் காய்ச்சி குடியேறினார்.  

              புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் த.அறிவுச்செல்வன் அரியலூர் மாவட்டம் தத்தனூர் கிராமத்தைச்  சேர்ந்தவர்.  பாமக மாநில இளைஞரணிச் செயலராக உள்ளார்.  இந்நிலையில் வேட்பாளர் வேறு தொகுதியைச் சேர்ந்தவர்.  வெற்றி பெற்றால் அவரை பார்க்க முடியாது என எதிர்கட்சியினர் பிரசாரம் செய்தனர்.  எனவே வெளியூர் வேட்பாளர் என்ற எதிர் கட்சியினரின் பிரசாரத்தை முறியடிக்க வேட்பாளர் த.அறிவுச்செல்வன் தொகுதிக்குட்பட்ட கிராமத்தில் புதன்கிழமை குடியேறினார்.  

               இந்நிகழ்ச்சியில், பாமக மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் தேவதாஸ் படையாண்டவர், முன்னாள் மாவட்டச் செயலர்கள் சிட்டிபாபு, சின்னதுரை, எஸ்.கே.ராஜேந்திரன், ஒன்றியச் செயலர் செல்வராஜ், மாவட்ட விவசாய அணி செயலர் சேரலாதன், கீரப்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

0 கருத்துகள்: