வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி, பா.ம.க., வேட்பாளர் சின்னதுரையை ஆதரித்து, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஓட்டு சேகரித்தார். தேர்தல் பிரசார கூட்டத்துக்கு மாவட்ட தி.மு.க., செயலர் எம்.பி., விஜயன் வகித்தார். பா. ம. க., மாவட்ட செயலர் அசோகன் வரவேற்றார்.
கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசியது:
வேதாரண்யம் தொகுதியை நாங்கள் கேட்டுப் பெறவில்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில், 24 முடிவு செய்யப்பட்டன. மீதமுள்ள ஆறு தொகுதிகளில் தென் மாவட்டங்களில் நான்கும், மற்ற இரண்டு தொகுதிகளில் வேதாரண்யம் தொகுதியையும் கூறினர். ஒப்பந்தம் செய்வதில் காலதாமதம் ஏற்படக் கூடாது என்பதற்காக இதை ஏற்றுக் கொண்டோம்.
இது தான் உண்மை நிலை.கட்சிக் கட்டுப்பாடு என்பது முக்கியம். அது உயிரைவிட மேலானது. கோபத்தில் வேதாரத்தினம் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்திருக்கலாம்.ப த்துக் கோடி மக்களின் தலைவர் கருணாநிதி திருவாரூரில் என்னிடம் கூறும் போது, "அந்த தம்பியிடம் அரை மணி நேரம் பேசிவிட்டேன். ஒரே வார்த்தையில் என்னை மன்னித்து விடுங்கள்' என, கூறிவிட்டார், எனக் கூறினர். இதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், எந்தக்கட்சி, எந்தக்கொடி அவரை உயர்த்தியதோ, அதற்காக மனம் திருந்தி அந்த கொடியை உயர்த்தி நம்பிக்கையுடன் இதைக் கூறுகிறேன்.
இது போன்ற மிகப்பெரிய கூட்டணி தமிழகத்தில் அமைந்ததில்லை. இந்த கூட்டணி சமூக நீதி கூட்டணியாகும். பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இணைந்துள்ளன. வடமாவட்டங்களில் இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க., தலைமையில் போட்டியிடுவதால் சாதாரணமாக , 110 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடும். இன்னும் ஆட்சி அமைக்க எட்டு இடங்கள் தான் தேவை.
காங்கிரஸ், 63 இடங்களிலும், பா. ம. க., 30 இடங்களிலும் போட்டியிடுகின்றன. எனவே, நாங்கள் ஆட்சி அமைக்க ஐந்து ஆண்டுக்கும் நிபந்தனையற்ற ஆதரவை தி.மு.க.,வுக்கு தருவோம். கூட்டணி மந்திரி சபையில் சேர மாட்டோம்.
காங்கிரஸ், 63 இடங்களிலும், பா. ம. க., 30 இடங்களிலும் போட்டியிடுகின்றன. எனவே, நாங்கள் ஆட்சி அமைக்க ஐந்து ஆண்டுக்கும் நிபந்தனையற்ற ஆதரவை தி.மு.க.,வுக்கு தருவோம். கூட்டணி மந்திரி சபையில் சேர மாட்டோம்.
வெளியில் இருந்து ஆதரவு தருவோம்."இன்றைக்கு தி.மு.க., கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடாது' என்பதற்காக ஒரு சில கட்சிகள், குறிப்பாக ஊடகங்கள், சில பத்திரிகைகள், தேர்தல் கமிஷன் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகிறது. கடந்த 1971ம் ஆண்டு தேர்தலிலும் இதே நிலை தான் இருந்தது. ஆனால், அந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணி, 184 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் செய்த மக்கள் நலத் திட்டத்தில் இக்கூட்டணி வெற்றி பெறும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக