தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசு ஏற்று நடத்தவேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,

                 தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி இரவி ராஜபாண்டியன் தலைமையிலான கட்டண நிர்ணயக்குழு, கல்விக்கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்கும் வரை பள்ளிகளை திறக்கமாட்டோம் என்றும், சமச்சீர் கல்விக்கான பாடநூல்கள் தரம் குறைவாக இருப்பதால் அக்கல்வி முறையை நடப்பாண்டில் நடைமுறைபடுத்தமாட்டோம் என்றும் தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன.

             இது தமிழக அரக்கு சவால் விடுக்கும் செயலாகும். அம்பானியின் குழந்தைகளுக்கு கிடைக்கும் அதே தரத்திலான கல்வி அடித்தட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்கப்பட வேண்டும் என்ற உன்னத இலக்கை நோக்கிய பயணத்தின் முதல் கட்டமாகத் தமிழக அரசு சமச்சீர் கல்வியையும், மத்திய அரசு கல்வி பெறும்உரிமைச் சட்டத்தையும் கொண்டுவந்துள்ளன.

              தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள சமச்சீர் கல்வியில் சிலகுறைபாடுகள் இருக்கலாம். இது காலப்போக்கில் களையப்பட வேண்டும். ஆனால், அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதற்கான முயற்சியில் அரக்கு துணை நிற்க வேண்டியத னியார் பள்ளிகள், தங்களது விருப்பம் போல கட்டணக் கொள்ளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோருவதும்,சமச்சீர் கல்வியை தங்களது விருப்பம் போலத் தான் செயல்படுத்துவோம் என்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
 

                இதுஅனைவருக்கும் தரமானகல்வி வழங்கும் முயற்சி என்ற கற்பக மரக்கன்றை வளர்ப்பதற்காக தண்ணீர் ஊற்றுவதற்கு பதில், வெந்நீர் ஊற்றி அழிக்கும் செயல் என்பதில் சந்தேகமில்லை. தனியார் பள்ளிகளின் இந்த முயற்சிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரக்கு உண்டு. ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க எதையெல்லாம் செய்ய வேண்டுமா, அதையெல்லாம் மாநில அரசுசெய்யவண்டும்.

              கட்டண உயர்வு கோரி மேல்முறையீடு செய்துள்ள 6,400 பள்ளிகளிடமும் விசாரணை நடத்திமுடிக்கப்பட்டுவிட்ட நிலையில், புதிய கல்விக் கட்டண விவரத்தை நீதிபதி இரவிராஜபாண்டியன் தலைமையிலான தமிழக அரசின் கட்டண நிர்ணயக்குழு உடனடியாக வெளியிடவேண்டும். அக்கட்டணம் ஏழைகளாலும் செலுத்தப்பட வேண்டிய அளவிலேயே இருக்கும்படி தமிழக அரசின் குழு பார்த்துக்கொள்ள வேண்டும்.

               அதை தனியார் பள்ளிகள் ஏற்றுக்கொள்வதை உறுதி செய்ய சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும்.இதற்கு பிறகும் தனியார் பள்ளிகள் வழிக்கு வரவில்லையென்றால் அவற்றுக்கு அரசின் நிதிஉதவியை வழங்கி அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக்கல்வி தரவண்டும். இல்லாவிட்டால் தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசு ஏற்று நடத்தவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை புதிய அரசு  தயக்கமின்றி மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்: