பசுமைத் தாயகம் அமைப்பினர் எதிர்ப்பு: மகேந்திர சிங் டோனி நடித்த மதுபான விளம்பர படங்கள் அகற்றம்

            இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி நடித்த மதுபான விளம்பர படங்கள் அகற்றப்பட்டதற்கு பசுமைத் தாயகம் அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.


             இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி நடித்த மதுபான விளம்பரபடங்கள் சென்னை நகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய டாக்டர் அன்புமணி ராமதாஸ், டோனிக்கு கடிதம் எழுதினார். இதைதொடர்ந்து டோனி மதுபான விளம்பரங்களில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று பசுமைத்தாயகம் அமைப்பினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

                கடந்த சிலநாட்களுக்கு முன்பு டோனி சென்னையில் பார்க் ஷெராட்டன் ஓட்டலில் தங்கியிருந்தபோது இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது மதுபான விளம்பரங்களில் நடிக்கக்கூடாது என்றும் சென்னையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர படங்களை உடனடியாக அகற்றவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் சென்னை நகரில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த டோனி நடித்த விளம்பர படங்கள் அகற்றப்பட்டன.

இதுகுறித்து பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில செயலாளர் அருள் கூறியது:

                        முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கையை ஏற்று சென்னை நகரில் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த டோனி விளம்பர படங்கள் அகற்றப்பட்டதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் மதுபான நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மது பானங்களை சிறுவர்களிடமும் இளைஞர்களிடமும் திணிக்கிறார்கள். இந்த தவறான செயலை அனைத்து ஐ.பி.எல். அணிகளும் கைவிடவேண்டும் என்றார்.


0 கருத்துகள்: