கடலூர்:
கடலூர் முதுநகர் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 35). கடலூர் 42-வது வார்டு பா.ம.க.கவுன்சிலர். நேற்று இவர் முதுநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது ஒரு கும்பல் வழிமறித்து சரமாரி வெட்டி விட்டு தப்பியது.
இதில் படுகாயமடைந்த செந்தில் சிகிச்சைக்காக புதுவை பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செந்தில் வெட்டப்பட்ட சேதி அறிந்ததும் அந்த பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு பதட்டம் நிலவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் பதட்டம் நீடிப்பதால் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ம.க. கவுன்சிலர் செந்தில் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் இதில் உள்ளாட்சி தேர்தல் முன் விரோதத்தில் செல்வம் தாக்கப்பட்டதாக தெரியவந்தது.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அண்ணன்- தம்பிகளான பாண்டியன், செல்வமணி, கண்ணன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக