புவனகிரி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வன் பார்வையிட்டார்


புவனகிரி சட்டமன்ற தொகுதி  

வாக்கு எண்ணும் மையத்தை பா.ம.க. வேட்பாளர் பார்வையிட்டார்
 
சிதம்பரம்:

             கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு சிதம்பரம் கடலூர் புறவழிச் சாலையில் உள்ள சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

          வருகிற 13ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் தினமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புவனகிரி சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அறிவுச்செல்வன் நேற்று சி.முட்லூர் அரசு கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சென்றார். பின்னர் அவர், வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட்டார்.

               மேலும், வாக்குப் பதிவு எந்திரங்கள் உள்ள அறைக்கு வருபவர்களை படம் பிடிக்கும் வெப்காமிராவுடன் கூடிய லேப்டாப்பையும் பார்வையிட்டார். அப்போது கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலரும், புவனகிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான கல்யாணம் அங்கு இருந்தார்.




0 கருத்துகள்: